அரசியல்

“ராகுல் காந்தியை பார்த்தால் பாஜக, RSS காரர்களுக்கு பயம்..” - காங்கிரஸ் செல்வப்பெருந்தகை தாக்கு !

ராகுல் காந்தியை பார்த்தால் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

“ராகுல் காந்தியை பார்த்தால் பாஜக, RSS காரர்களுக்கு பயம்..” - காங்கிரஸ் செல்வப்பெருந்தகை தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது "மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லோரும் திருடர்களாக இருக்கிறார்கள்" என கூறியிருந்தார்.

இதையடுத்து மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்ததாகக் கூறி பா.ஜ.க நிர்வாகி புர்னேஷ் மோடி வாழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

“ராகுல் காந்தியை பார்த்தால் பாஜக, RSS காரர்களுக்கு பயம்..” - காங்கிரஸ் செல்வப்பெருந்தகை தாக்கு !

பின்னர் சூரத் நீதிமன்றத்தை எதிர்த்து குஜராத் உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும் மறுத்து விட்டது. ராகுல் காந்திக்கு எதிராக 10 அவதூறு புகார்கள் நிலுவையில் இருப்பதால் செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவில் எந்தத் தலையீடும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு மட்டுமல்லாமல் ராகுல் காந்தி மீது சாவர்க்கரின் பேரன் ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, எந்த வகையிலும் அநீதியை ஏற்படுத்தாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதையடுத்து ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“ராகுல் காந்தியை பார்த்தால் பாஜக, RSS காரர்களுக்கு பயம்..” - காங்கிரஸ் செல்வப்பெருந்தகை தாக்கு !

குஜராத் உயர்நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான செல்வ பெருந்தகை தலைமையில் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் திடீரென சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் சாலை ஓரத்தில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியதாவது, "இன்று குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் இயங்குகிறதா இல்லையா என்பது மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.

“ராகுல் காந்தியை பார்த்தால் பாஜக, RSS காரர்களுக்கு பயம்..” - காங்கிரஸ் செல்வப்பெருந்தகை தாக்கு !

நாங்கள் கேட்பது எல்லாம் இந்த நாட்டிலே பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை அனைவருக்கும் உண்டு; தனிப்பட்ட முறையில் எங்கள் தலைவர் ராகுல் காந்தி யாரையும் சுட்டிக்காட்டவில்லை. ஏன் ராகுல் காந்தியை மட்டும் குறி வைக்கிறார்கள் என்றால், ராகுல் காந்தியை பார்த்தால் மோடிக்கும், பாஜக-விற்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் பயம் வருகிறது.

இந்த பாசிச ஆட்சியை எதிர்த்து இந்தியா முழுவதும் கண்டன முழக்கங்கள் எழுப்பு வருகின்றன. வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய தேச மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். மிகப்பெரிய அளவில் தோல்வியை கொடுப்பார்கள். புதிய ஆட்சி ஏற்படும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வருவார்; அவர் தான் எங்கள் தலைவர் ராகுல் காந்தி." என்றார்.

“ராகுல் காந்தியை பார்த்தால் பாஜக, RSS காரர்களுக்கு பயம்..” - காங்கிரஸ் செல்வப்பெருந்தகை தாக்கு !

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான உறுதியை இருமடங்கு அதிகரிக்க செய்திருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, "குஜராத் மண்ணில் நீதி கிடைக்காது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என தெரிவித்துள்ளார். இப்படி பலரும் ராகுல் காந்தியின் மனு தள்ளுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories