அரசியல்

துப்பாக்கியால் சுடப்பட்ட பீம் ஆர்மி தலைவர்.. உ.பியில் மற்றொரு அதிர்ச்சி.. எப்படி இருக்கிறார் ஆசாத் ?

உத்தரபிரதேச அரசியல் தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுடப்பட்ட பீம் ஆர்மி தலைவர்.. உ.பியில் மற்றொரு அதிர்ச்சி.. எப்படி இருக்கிறார் ஆசாத் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித்துகள் ஆட்சியை தீர்மானிக்க கூடிய அளவில் அதிக எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர். அங்கு தலித்துகளின் மிகப்பெரும் தலைவராக திகழ்ந்த கன்சிராமுக்கு பின்னர் மாயாவதி மிகப்பெரும் தலித் தலைவராக உருவெடுத்தார்.

அதோடு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேச ஆட்சியையும் பிடித்து அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்ந்தது. அதோடு இந்தியாவில் பல்வேறு இடங்களில் தேர்தலில் வெற்றிபெற்று பகுஜன் சமாஜ் தேசிய கட்சியாகவும் உயர்ந்தது.

ஆனால், சமீப காலமாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தலித்துகள் மத்தியில் செல்வாக்கை தொடர்ந்து இழந்து வருகிறது. இதற்கு காரணம் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளுக்கு மாயாவதி குரல் கொடுக்காததே காரணம் என கூறப்படுகிறது. மாயாவதியின் இந்த வீழ்ச்சியைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் பீம் ஆர்மி என்ற தலித் அமைப்பு வலிமை பெற்று வருகிறது.

துப்பாக்கியால் சுடப்பட்ட பீம் ஆர்மி தலைவர்.. உ.பியில் மற்றொரு அதிர்ச்சி.. எப்படி இருக்கிறார் ஆசாத் ?

அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் பாஜகவின் சாதிய அரசியலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் தியோபந்த் நகரில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேறு காரில் சென்ற மர்ம நபர்கள் சந்திரசேகர் ஆசாத் சென்ற காரை நோக்கி 2 முறை சுட்டு துப்பாக்கியால் சுட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் சந்திரசேகர் ஆசாத்துக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் அவர் வீட்டுக்கு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சந்திரசேகர் ஆசாத் மீது நடந்த இந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories