அரசியல்

”இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை”.. மோடி அரசாங்கத்தை விமர்சித்த பாரக் ஒபாமா!

மோடி அரசாங்கத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா விமர்சித்துள்ளார்.

”இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை”.. மோடி அரசாங்கத்தை விமர்சித்த பாரக் ஒபாமா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த மாநிலத்தில் எழுந்துள்ள பிரச்சனையில் தலையிட்டு ஒன்றிய அரசு அமைதியை ஏற்படுத்த வேண்டும், பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் செல்லாமல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கடந்த 20ம் தேதி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார்.

”இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை”.. மோடி அரசாங்கத்தை விமர்சித்த பாரக் ஒபாமா!

ஜூக் 21ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபை வளாகத்தில் நடந்த யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றனர். பின்னர் நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் சந்தித்து உரையாடினார்.

இந்நிலையில், மோடி அரசாங்கத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா விமர்சித்துள்ளார். ஏதென்ஸ் நகரில் CNN ஆங்கில தொலைக் காட்சிக்கு பராக் ஒபாமா பேட்டி கொடுத்துள்ளார்.

”இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை”.. மோடி அரசாங்கத்தை விமர்சித்த பாரக் ஒபாமா!

அப்போது, அமெரிக்க அதிபர் பைடன், இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து உரையாடுவது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய பாரக் ஒபாமா, "இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால், 'இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை எனில், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வலுவான வாய்ப்பாக அதுவே அமையும்' என்பதே என்னுடைய வாதமாக இருந்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories