அரசியல்

”அமலாக்கத்துறையை கொண்டு அச்சுறுத்தும் மோடி”: தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு குரல் கொடுத்த எதிர்கட்சி தலைவர்கள்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் நடந்த வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

”அமலாக்கத்துறையை கொண்டு அச்சுறுத்தும் மோடி”: தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு குரல் கொடுத்த எதிர்கட்சி தலைவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பா.ஜ.க. தலைமை உணர வேண்டும். அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”அமலாக்கத்துறையை கொண்டு அச்சுறுத்தும் மோடி”: தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு குரல் கொடுத்த எதிர்கட்சி தலைவர்கள்!

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்க உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே:

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்றவற்றில் மோடி அரசின் வெட்கக்கேடான முயற்சிகள் இவை.

அரசியல் எதிரிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய மோசமான துஷ்பிரயோகம் மோடி அரசாங்கத்தின் அடையாளமாகும்.

இந்த உத்திகள் எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதில் வெற்றியடையாது. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தைத் தொடரும் உறுதியையும் உறுதியையும் மட்டுமே அவை வலுப்படுத்துகின்றன.

”அமலாக்கத்துறையை கொண்டு அச்சுறுத்தும் மோடி”: தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு குரல் கொடுத்த எதிர்கட்சி தலைவர்கள்!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி:-

மத்திய அரசு நிறுவனங்களை பயன்படுத்தி எதிர்கட்சிகளை பாஜக அச்சுறுத்துவது முடிவின்றி தொடர்கிறது. தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சரான திரு.செந்தில் பாலாதிக்கு எதிராக நடத்தப்படும் அமலாக்கத்துறை ரெய்டுகளுக்கு கடும் கண்டனங்கள். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையால் சரிசெய்ய முடியாத பாதிப்பை நம் ஜனநாயகத்துக்கு பாஜக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்:-

மத்திய அரசு நிறுவனங்களை பயன்படுத்தி எதிர்கட்சிகளை பாஜக அச்சுறுத்துவது முடிவின்றி தொடர்கிறது. தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சரான திரு.செந்தில் பாலாதிக்கு எதிராக நடத்தப்படும் அமலாக்கத்துறை ரெய்டுகளுக்கு கடும் கண்டனங்கள். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையால் சரிசெய்ய முடியாத பாதிப்பை நம் ஜனநாயகத்துக்கு பாஜக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

”அமலாக்கத்துறையை கொண்டு அச்சுறுத்தும் மோடி”: தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு குரல் கொடுத்த எதிர்கட்சி தலைவர்கள்!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்:-

எதிர்க்கட்சிகள் தலைமை தாங்கும் அரசாங்கங்களுக்கு எதிரான அமலாக்கத்துறையின் இடைவிடாத நடவடிக்கைகளை கண்டிக்கிறேன். செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் ரெய்டு நடத்துவதன் வழியாக, ஜனநாயகத்தன்மையற்ற ஒன்றிய அரசுக்கு எதிரான குரலை ஒடுக்கும் கெடுநோக்குடன் தென் மாநிலங்களுக்குள்ளும் தற்போது அமலாக்கத்துறை நுழைந்திருக்கிறது.

சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி:-

தமிழ்நாட்டின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமைச் செயலக அலுவலகத்தில் நடக்கும் ரெய்டுகளுக்குக் கண்டனங்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையை மோடி அரசாங்கம் ஆயுதம் போல பயன்படுத்துகிறது.

banner

Related Stories

Related Stories