அரசியல்

“ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நான் உன்னை மிரட்டுறேன்னு அழுதாயா?” -ஒருமையில் வறுத்தெடுத்த காயத்ரி ரகுராம்

பாஜக வழக்கறிஞர் காயத்ரி ரகுராம் மீது புகார் கொடுத்ததை தொடர்ந்து அண்ணாமலையை ஒருமையில் கலாய்த்துள்ளார் காயத்ரி ரகுராம்.

“ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நான் உன்னை மிரட்டுறேன்னு அழுதாயா?” -ஒருமையில் வறுத்தெடுத்த காயத்ரி ரகுராம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஊரே நாறும் அளவிற்கு பா.ஜ.கவின் உட்கட்சி பூசல் வெளியே வந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களும் வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

“ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நான் உன்னை மிரட்டுறேன்னு அழுதாயா?” -ஒருமையில் வறுத்தெடுத்த காயத்ரி ரகுராம்

கே.டி.ராகவன் தொடங்கி, திருச்சி சூர்யா வரை பா.ஜ.க முக்கிய புள்ளிகள் மீது சொந்தக் கட்சி பெண் நிர்வாகிகளே புகார் அளித்துள்ள செய்திகள் எல்லாம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்து பா.ஜ.க நாறிக் கிடக்கிறது. இது எல்லாம் ஒரு கட்சியா? என்று பெண்களே பேசும் அளவிற்குத் தமிழ்நாட்டு பா.ஜ.க உள்ளது.

“ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நான் உன்னை மிரட்டுறேன்னு அழுதாயா?” -ஒருமையில் வறுத்தெடுத்த காயத்ரி ரகுராம்

கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவின் பெண் நிர்வாகி டெய்சியை, திருச்சி சூர்யா அருவருக்கத்தக்க வகையில் பேசியது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக கண்டன குரலையும் காயத்ரி ரகுராம் எழுப்பியிருந்தார்.

இதனால் அவரை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தன்மீது என்ன தவறு உள்ளது என்று தொடர்ந்து கூச்சல் போட்டு வந்த காயத்ரியை, பாஜகவில் இருப்பவர் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனம்நொந்து பாஜகவில் இருந்து மொத்தமாக விலகினார் காயத்ரி.

“ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நான் உன்னை மிரட்டுறேன்னு அழுதாயா?” -ஒருமையில் வறுத்தெடுத்த காயத்ரி ரகுராம்

தொடர்ந்து அண்ணாமலை குறித்தும், தமிழ்நாடு பாஜகவை குறித்தும் உண்மைகளை புட்டு புட்டு வைத்து வருகிறார் காயத்ரி. மேலும் அண்ணாமலை வந்த பிறகே இதுபோன்ற குற்றங்கள் வருவதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதோடு பா.ஜ.கவில் கடந்த ஒரு வருடமாக ஹனிட்ராப் எனும் புதிய விஷயம் வந்துள்ளது. இது ஒரு பெண்ணுக்கு ஆபத்தானது என்றும், துபாய் ஹோட்டலில் நான் ஹனிட்ராப் செய்தேன் என 150 பேருக்கு முன்னால் அண்ணாமலை தவறாகப் பேசியதாகவும் குற்றம்சாட்டினார்.

டாக்டர் சரவணன், காயத்ரி ரகுராம் என தொடர்ந்து அண்மையில் பாஜகவின் ஐடி விங் தலைவர் செயலாளர் உள்ளிட்டோர் விலகி மாற்று கட்சியில் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகிகள் 100 பேர் பாஜகவில் இருந்து கூண்டோடு விலகி மாற்று கட்சியில் இணைந்துள்ளனர்.

“ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நான் உன்னை மிரட்டுறேன்னு அழுதாயா?” -ஒருமையில் வறுத்தெடுத்த காயத்ரி ரகுராம்

இப்படி தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜக மேலும் கீழ் நோக்கி செல்லும் நிலையில் மக்களே இதெல்லாம் ஒரு கட்சியா என்று காரி துப்புகின்றனர். இப்படி தொடர்ந்து பாஜகவை குறித்தும், அண்ணாமலை குறித்தும் கருத்து தெரிவித்து வரும் காயத்ரி ரகுராம் மீது வழக்கறிஞரும், பாஜக துணைத் தலைவருமான ஜி.எஸ்.மணி புகார் தெரிவித்துள்ளார்.

அந்த புகாரில் பாஜகவை விட்டு விலகியதில் இருந்து மாநில தலைவர் அண்ணாமலை குறித்தும், தமிழ்நாடு பாஜகவை குறித்தும் காயத்ரி ரகுராம் அவதூறான கருத்துகளை பரப்பி வருகிறார். வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துகளை கூறி வருகிறார். இதனால் காயத்ரி ரகுராம் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நான் உன்னை மிரட்டுறேன்னு அழுதாயா?” -ஒருமையில் வறுத்தெடுத்த காயத்ரி ரகுராம்

இந்த புகாரை தொடர்ந்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அண்ணாமலை, நான் உன்னை துஷ்பிரயோகம் செய்தேன், மிரட்டுகிறேன், உன்னை பிளாக்மெயில் செய்தேன் என்று திரு ஜிஎஸ் மணி அவர்களிடம் அழுதாயா? நான் எப்போது செய்தேன்? உங்கள் நகைச்சுவை கருத்துக்களுக்காக நான் சிரித்துவிட்டு என் நகைச்சுவை கருத்துகளை தெரிவித்தேன். அவ்வளவுதான்.. ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நீயும் சினிமா துறையைப் பற்றி பேசியுள்ளீர்கள்.. கருத்து சுதந்திரம் தானே.. கோச்சிக்க கூடாது.” என ஒருமையில் குறிப்பிட்டு கலாய்த்துள்ளார்.

banner

Related Stories

Related Stories