அரசியல்

“வந்தேறிகள்..” - குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி பேசிய சீமான்.. நாம் தமிழர் கட்சியினரை விரட்டி அடித்த மக்கள்!

வந்தேறிகள் என்று கூறிய சீமான் பேச்சுக்கு வலுத்த கண்டங்கள் தெரிவித்து ஈரோடு தொகுதி மக்கள் நாம் தமிழர் கட்சியினரை விரட்டி அடித்துள்ளது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“வந்தேறிகள்..” - குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி பேசிய சீமான்.. நாம் தமிழர் கட்சியினரை விரட்டி அடித்த மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து போட்டியிடுகிறது. தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு தற்போது காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

“வந்தேறிகள்..” - குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி பேசிய சீமான்.. நாம் தமிழர் கட்சியினரை விரட்டி அடித்த மக்கள்!

காங்கிரஸுக்கு ஆதரவாக அதன் கூட்டணி கட்சிகள், மேலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஆதரவு தெரிவித்துள்ளது. தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

“வந்தேறிகள்..” - குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி பேசிய சீமான்.. நாம் தமிழர் கட்சியினரை விரட்டி அடித்த மக்கள்!

இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரான திருமதி. மேனகா நவநீதன் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக சீமான் கள பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சீமான் பொதுவாகவே கதை கதையாக உருட்டுவார். தற்போது அதே போல் பிரச்சாரத்தின் போது, ஒரு சமூகத்தை குறிப்பிட்டு, அந்த சமூகத்தினர் போருக்கு முதலில் வந்ததால் அப்படி அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

“வந்தேறிகள்..” - குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி பேசிய சீமான்.. நாம் தமிழர் கட்சியினரை விரட்டி அடித்த மக்கள்!

இது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் சீமான் மீண்டும் ஒரு கண்டெண்டாக மாறினார். தொடர்ந்து இந்த விவகாரமே இன்னும் ஓயாத நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியினரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் விரட்டி அடித்துள்ளனர்.

அவர்கள் விரட்டி அடிப்பதற்கான காரணத்தை குறிப்பிட்ட மக்கள், தங்கள் சமூகத்தை 'வந்தேறிகள்' என்று கூறியதாக குற்றம்சாட்டினர். மேலும் வந்தேறிகளான தங்கள் சமூகத்தின் ஓட்டு எதற்கு என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை கடுமையாக தாக்கி அவர்களை 'வந்தேறிகள்' என்று சீமான் பேசி வந்தது தற்போது ஈரோடு தொகுதி தேர்தலில் பிரதிபலித்துள்ளது. இது அந்த பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“வந்தேறிகள்..” - குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி பேசிய சீமான்.. நாம் தமிழர் கட்சியினரை விரட்டி அடித்த மக்கள்!

ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அந்த பகுதி மக்கள் நாம் தமிழர் கட்சியினரை விரட்டியடிப்பது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக அதிமுகவினர் அந்த தொகுதியில் உள்ள ஒரு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பகுதி மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories