அரசியல்

"காவி கட்சிக்கு பிரச்சார தூதுவராக இருக்கும் ஆளுநர் R.N.ரவி".. கடுமையாக சாடிய முன்னாள் நீதிபதி சந்துரு!

காவி கட்சிக்குப் பிரச்சார தூதுவராக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முன்னாள் நீதிபதி சந்துரு கடுமையாக விமர்சித்துள்ளார்.

"காவி கட்சிக்கு பிரச்சார தூதுவராக இருக்கும் ஆளுநர் R.N.ரவி".. கடுமையாக சாடிய முன்னாள் நீதிபதி சந்துரு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவிக்கு வந்ததில் இருந்தே மாநில அரசுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதோடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார். அண்மையில் கூட தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதுதான் சரியானது என பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.

இதோடு நின்று விடாத ஆளுநர் அண்மையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற வார்த்தைகளை வேண்டும் என்றே தவிர்த்து உரையாற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

"காவி கட்சிக்கு பிரச்சார தூதுவராக இருக்கும் ஆளுநர் R.N.ரவி".. கடுமையாக சாடிய முன்னாள் நீதிபதி சந்துரு!

இப்படி தொடர்ச்சியாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திக் கடந்த ஒரு வாரமாக காங்கிரஸ், வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. இந்நிலையில் காவி கட்சிக்குப் பிரச்சார தூதுவராக ஆளுநர் செயல்படுகிறார் என முன்னாள் நீதிபதி சந்துரு கடுமையாக விமர்சித்துள்ளார்.

தி.மு.க. சட்டத்துறை சார்பாக 'அரசியல் அமைப்புச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு," மனித உரிமைகளை மீறினால் எந்த அரசாக இருந்தாலும் அதனை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும். அது ஆளுநராக இருந்தாலும் குடியரசுத் தலைவராக இருந்தாலும் நாம் குரல் எழுப்ப வேண்டும்.

"காவி கட்சிக்கு பிரச்சார தூதுவராக இருக்கும் ஆளுநர் R.N.ரவி".. கடுமையாக சாடிய முன்னாள் நீதிபதி சந்துரு!

ஆன்லைன் ரம்மி தொடர்பாகத் தமிழ்நாடு அரசு ஒரு குழு ஒன்றை அமைத்தது. அதற்குத் தலைவராக நான் இருந்தேன். நாங்கள் ஆராய்ந்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று அறிக்கையைச் சமர்ப்பித்தோம். அதை ஏற்ற அரசும் அவசரச் சட்டம் பிறப்பித்தது.

அந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையொப்பமிட்டார். சட்டப்பேரவையில் அவசர சட்டத்தின் ஒரு பிரதி சட்டமாக நிறைவேற்றப்படுவதற்காக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதாவுக்கு அதே ஆளுநர் கையொப்பமிட மறுக்கிறார். ஆளுநர் சூதாட்ட கம்பெனி முதலாளிகளுக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து அளித்துக் கொண்டிருக்கிறார்.

ஆட்டுக்குத் தாடி எதற்கு நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்று அண்ணா எழுப்பிய கேள்வியைத்தான் மக்கள் மன்றத்தில் நாம் எழுப்ப வேண்டும். காவி கட்சிக்குப் பிரச்சார தூதுவராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். இந்த ஆளுநர் மட்டுமல்ல எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு நாம் விரைவில் தள்ளப்படுவோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories