அரசியல்

திராவிட மாடல் முதல் சமூகநீதி வரை.. தனது உரையில் வேண்டும் என்றே ஆளுநர் ரவி தவிர்த்த 8 வார்த்தைகள் என்ன?

சட்டப்பேரவையில் திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்துள்ளதால் அவருக்குக் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

திராவிட மாடல் முதல் சமூகநீதி வரை..  தனது உரையில் வேண்டும் என்றே ஆளுநர் ரவி தவிர்த்த 8 வார்த்தைகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அலட்சியமாக நடந்து கொண்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நலத்திட்டங்களும் கிடைக்காமல் போகிறது.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா என மாநில அரசு கொண்டு வந்த 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார். மேலும் ஆளுநர் போல் நடந்து கொள்ளாமல் தனது சனாதன கருத்துக்களைப் பொதுவெளியில் பேசி வருகிறார்.

திராவிட மாடல் முதல் சமூகநீதி வரை..  தனது உரையில் வேண்டும் என்றே ஆளுநர் ரவி தவிர்த்த 8 வார்த்தைகள் என்ன?

அதோடு தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர் போன்று நடந்து கொண்டு வருகிறார். அண்மையில் கூட தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதே சரியானது என பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இன்று 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

திராவிட மாடல் முதல் சமூகநீதி வரை..  தனது உரையில் வேண்டும் என்றே ஆளுநர் ரவி தவிர்த்த 8 வார்த்தைகள் என்ன?

இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையைத் தொடர்ந்து வாசித்து முடித்தார். அப்போது தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இருந்த

சமூகநீதி,

சுயமரியாதை,

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி,

சமத்துவம்,

பெண்ணுரிமை,

மதநல்லிணக்கம்,

பல்லூயிர் ஒப்புதல்,

திராவிட மாடல்,

- ஆகிய வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து வாசித்துள்ளார்.

பொதுவாகத் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையைத்தான் சட்டப்பேரவையில் ஆளுநர் வாசிப்பது மரபு. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டும் என்றே தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இடம் பெற்ற வார்த்தைகளை தவிர்த்துள்ளார்.

திராவிட மாடல் முதல் சமூகநீதி வரை..  தனது உரையில் வேண்டும் என்றே ஆளுநர் ரவி தவிர்த்த 8 வார்த்தைகள் என்ன?

அவர் தவிர்த்த வார்த்தைகள் அனைத்துமே தமிழ்நாட்டின் அடையாளங்களையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள் ஆகும். குறிப்பாக இது 'திராவிட மாடல்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் பேசிவருகிறார். இந்நிலையில்தான் வேண்டும் என்றே ஆளுநர் திராவிட மாடல் அரசு என்ற வார்த்தையை தவிர்த்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தின் ஆளுநராக இல்லாமல் பா.ஜ.க கட்சியின் பிரதிநிதிபோல் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து வருவது பொதுமக்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories