தமிழ்நாடு

"தமிழ்நாடு.. தமிழ்நாடு".. சட்டப்பேரவையில் தனது உரையில் சரியாக சொன்ன ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழகம் தான் சரியான சொல் என கூறிய நிலையில் சட்டப்பேரவையில் தமிழ்நாடு என்று தனது உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிப்பிட்டு உள்ளார்.

"தமிழ்நாடு.. தமிழ்நாடு".. சட்டப்பேரவையில் தனது உரையில்  சரியாக சொன்ன ஆளுநர் ஆர்.என்.ரவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அலட்சியமாக நடந்து கொண்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நலத்திட்டங்களும் கிடைக்காமல் போகிறது.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா என மாநில அரசு கொண்டு வந்த 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார். மேலும் ஆளுநர் போல் நடந்து கொள்ளாமல் தனது சனாதன கருத்துக்களைப் பொதுவெளியில் பேசி வருகிறார்.

"தமிழ்நாடு.. தமிழ்நாடு".. சட்டப்பேரவையில் தனது உரையில்  சரியாக சொன்ன ஆளுநர் ஆர்.என்.ரவி!

அதோடு தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர் போன்று நடந்து கொண்டு வருகிறார். அண்மையில் கூட தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதே சரியானது என பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இன்று 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

"தமிழ்நாடு.. தமிழ்நாடு".. சட்டப்பேரவையில் தனது உரையில்  சரியாக சொன்ன ஆளுநர் ஆர்.என்.ரவி!

இதற்கிடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருந்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒவ்வொரு முறையும் “தமிழ்நாடு.. தமிழ்நாடு” என தனது உரையில் குறிப்பிட்டார். தமிழகம்தான் சரியான சொல் என கூறிய ஆளுநரையை தமிழ்நாடு என சட்டப்பேரவையிலேயே தமிழ்நாடு அரசு கூறவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories