தமிழ்நாடு

“எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” - சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய எம்.எல்.ஏக்கள் !

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநருக்கு எதிராக விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் “எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” என முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.

“எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” - சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய எம்.எல்.ஏக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடப்பாண்டின் (2023) முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தொடங்கும் முன்பே தலைமை செயலகம் வளாகத்தில் மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

“எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” - சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய எம்.எல்.ஏக்கள் !

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், இக்கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆர்.என்.ரவி தமிழில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறினார்.

“எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” - சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய எம்.எல்.ஏக்கள் !

தொடர்ந்து அவர் தனது உரையை தொடங்கும்போதே காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காட்டினர். மேலும் அவர்கள் “எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” என்றும், “தமிழ்நாடு வாழ்க..” என்றும் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து முழக்கம் எழுப்பியபோதும், ஆளுநர் தனது உரையை பேசிக்கொண்டே இருந்தார்.

“எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” - சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய எம்.எல்.ஏக்கள் !

இருப்பினும் தொடர்ந்து அதிமுகவை தவிர காங்கிரஸ், மதிமுக, விசிக, த.வா.க., உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி "தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சரி" என்று கூறியதால், தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

திமுக, விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், இணையவாசிகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் ஆளுநருக்கு எதிராக கண்டங்கள் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து #தமிழ்நாடு என்று இணையத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories