தமிழ்நாடு

”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!

”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் இன்று (30.10.2025) சென்னை வர்த்தக மையத்தில் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரலாகத் ஜோஷி அவர்களைச் சந்தித்து நெல் ஈரப்பதத்தை 17% இலிருந்து 22% ஆக உயர்த்திக் கொள்முதல் செய்திட அனுமதியும் செறிவூட்டப்பட்ட அரிசியைச் சோதனை செய்து, தரச் சான்றினை (Fit for Blending Certificate) விரைந்து வழங்கிடவும் ஆவன செய்திட வேண்டுகோள்!

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'விண்டெர்ஜி இந்தியா 2025 கருத்தரங்கத்திற்காக வருகை தந்திருந்த ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரலாகத் ஜோஷி அவர்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு சக்கரபாணி அவர்கள் சந்தித்து ஈரப்பதத்தை 17% இலிருந்து 22% ஆக அதிகரித்து நெல் கொள்முதல் செய்திடவும் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கலப்பதற்கான தரச்சான்றினை விரைந்து வழங்கிட ஆவண செய்திடக் கேட்டுக் கொண்டதோடு கீழ்க்காணும் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டுகோள் விடுத்தார்கள்.

”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!

2016 முதல் 2021 வரை தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய உணவு மானிய நிலுவைத் தொகை ரூபாய் 973 கோடி ரூபாயை வழங்கல்!

2010-11, 2013-14 & 2014-15 ஆண்டுகளுக்கான அரிசிக்காக இறுதி செய்யப்பட்ட விலை (Final Economic Cost) முன்மொழிவினை ஏற்று அதற்கான தொகை வழங்குதல்!

நெல்லைக் காய வைக்கும் இயந்திரங்களை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கிட உதவி செய்தல்!

மேலும், அக்டோபர் டிசம்பர் 2025 மாதங்களுக்கான மானியத் தொகையில் ரூபாய் 1745.66 கோடி வழங்கிட அனுமதி அளித்ததற்காக ஒன்றிய அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அவர்கள் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயணர் சத்ய பிரதா சாகு, இ.ஆ.ப. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் முனைவர் ஆ. அண்ணாதுரை, இ.ஆ. உணவுப்பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் சு.சிவராக, இ.ஆ.ப. மற்றும் ஒன்றிய அரசின் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

banner

Related Stories

Related Stories