அரசியல்

“ஆதாரம் கேட்டேல்லா.. உள்ள வா பஞ்சாயத்த வச்சுக்கலாம்..” - காயத்ரி குறித்த கேள்விக்கு மிரட்டிய அண்ணாமலை !

“ஆதாரம் கேட்டேல்லா.. உள்ள வா பஞ்சாயத்த வச்சுக்கலாம்..” - காயத்ரி குறித்த கேள்விக்கு மிரட்டிய அண்ணாமலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை தி நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கமால் அவர்களை மிரட்டும் தோணியில் பேசியுள்ளார்.

மேலும் காயத்ரி ரகுராம் முதல் ரபேல் வாட்ச் வரை பத்திரிகையாளர்கள் துளைத்து துளைத்து கேள்வி எழுப்பி வந்தனர். அவர்களுக்கு சரியான பதிலளிக்காமல் அவர்கள் அனைவரையும் மிரட்டிய் அண்ணாமலை, அவர்களிடம் நீங்கள் எந்த செய்தி என்றும், உங்கள் பெயர் என்ன என்றும் மிரட்டினார். அதோடு அண்ணாமலை ஆத்திரப்பட அவருடன் இருப்பவர்களும் பத்திரிக்கையாளர்களிடம் சீறினார்கள்.

“ஆதாரம் கேட்டேல்லா.. உள்ள வா பஞ்சாயத்த வச்சுக்கலாம்..” - காயத்ரி குறித்த கேள்விக்கு மிரட்டிய அண்ணாமலை !

மேலும் அண்ணாமலை பத்திரிகையாளரது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து அவமானப்படுத்தியும் வந்தார். சில யூடியூப் சேனல்கள் சார்பாக அவரிடம் கேள்விகேட்டபோது, கேள்வி கேட்க நீங்கள் யார்? அப்படி ஒரு யூடியூப் சேனல் இருக்கிறதா? வெறும் 40 ஆயிரம் ரூபாய் கேமரா, மொபைல் போன் வைத்துக்கொண்டு லைக் வாங்குவதற்காக பேட்டியெடுக்க வந்துவிடுவதா? என்று டிஜிட்டல் மீடியாவை அவமானப்படுத்தியுள்ளார்.

அதோடு கேள்வி கேட்பது யாராக இருந்தாலும் அவர்கள் பெயர், சேனல் பெயரையும் கூறிவிட்டு கேளுங்கள் என்று திமிரோடு கூறிய அண்ணாமலை, தொடர்ந்து கேள்வி எழுப்பிய இரு சேனல்கள் அவர்கள் கேள்விகளுக்கு ரூமில் வைத்து பஞ்சாயத்து செய்கிறேன் என்று கூறினார். இதனால் அங்கு பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

“ஆதாரம் கேட்டேல்லா.. உள்ள வா பஞ்சாயத்த வச்சுக்கலாம்..” - காயத்ரி குறித்த கேள்விக்கு மிரட்டிய அண்ணாமலை !

முன்னதாக பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம், பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றபிறகே வீடியோ கலாச்சாரம் வந்ததாகவும், அவர் வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றசாட்டை முன்வைத்தார். மேலும் டெல்லியில் தன்னை அவமான படுத்தும் வீடியோவும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார்.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் பற்றி பேச விரும்பவில்லை. பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் எங்கே சென்றாலும் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன். கட்சியில் இருந்து செல்வோர், புகழ்ந்துவிட்டு தான் வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. என் மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். ஆனால் அவதூறு சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று கேள்விக்குப் பதில் சொல்லாமல் மழுப்பினார்.

“ஆதாரம் கேட்டேல்லா.. உள்ள வா பஞ்சாயத்த வச்சுக்கலாம்..” - காயத்ரி குறித்த கேள்விக்கு மிரட்டிய அண்ணாமலை !

தொடர்ந்து காயத்ரி ரகுராம் குற்றசாட்டு குறித்த ஆதாரங்களை வெளியிடுங்கள் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்கையில், அதற்கு நீங்கள் யார், என்ன சேனல், நான் ஒன்றும் உங்கள் காலில் விழவில்லை. என்னை Bycott செய்ய வேண்டுமென்றால் செய்யுங்கள் என்று முழுவதுமாக அசிங்கப்படுத்தி பேசினார்.

“ஆதாரம் கேட்டேல்லா.. உள்ள வா பஞ்சாயத்த வச்சுக்கலாம்..” - காயத்ரி குறித்த கேள்விக்கு மிரட்டிய அண்ணாமலை !

மேலும் உங்களுக்கு ஆதாரங்கள் தானே தேவை, சந்திப்பு முடிந்ததும் உள்ளே வாருங்கள் அங்கே வைத்துக்கொள்ளலாம் பஞ்சாயத்தை என்று, ரஜினிகாந்தின் 'சிவாஜி' படத்தில் இடம்பெறும் காட்சி போல் மிரட்டி பேசினார்.

அதோடு அண்ணாமலை அருகிலிருந்தவர்கள் 'தலையே சும்மா இருக்கு.. வால் ஏன் துள்ளுது..?' என்பது போல் எகிறி வந்தார்கள். விட்டால் பத்திரிகையாளர்களை அடித்தே இருப்பார்கள். அந்த அளவு துள்ளினார்கள். தொடர்ந்து நீங்கள் எல்லாம் பத்திரிகையளர்களா என்று அசிங்கப்படுத்தி கேட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த மிரட்டல் முதல்முறை அல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பே பத்திரிகையாளர் சந்திப்பில், அவர்கள் குரங்கு என்று சாடினார்.

இதற்கும் பல கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு மெத்தன தன்மையோடு அசிங்கப்படுத்தி வருகிறார். இவரது இந்த பேச்சு தற்போது ஊடகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories