அரசியல்

கேள்விக்கு பதிலளிக்காமல் மீடியாக்களை மிரட்டிய அண்ணாமலை.. செய்தியாளர்களை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு !

செய்தியாளர்களின் கேள்வியால் ஆவேசமடைந்த அண்ணாமலை செய்தியாளர்களை நோக்கி ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேள்விக்கு பதிலளிக்காமல் மீடியாக்களை மிரட்டிய அண்ணாமலை.. செய்தியாளர்களை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை பொறுப்பிற்கு வந்ததில் இருந்து, தற்போது வரை தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றால்லாம் கதை விட்டு வந்தார். அரசியல் கட்சித் தலைவர்களை விமரசனம் என்ற பெயரில் அவர்களின் ஆடைகளின் விலையைப் பற்றி விமர்சிர்த்ததே பா.ஜ.கவினர்தான். ஆனால் அப்போதெல்லாம் பொங்காத அண்ணாமலை, இன்று அவருக்கு அதேவிமர்சனம் என்றதும் அலறுகிறார்.

சமீபத்தில் ராகுல் காந்தி ஆடையில் விலையை பா.ஜ.கவினர் கேள்வி எழுப்பினர். அப்போது சமூக வலைதளங்களில் மோடி அணியும் ஆடைகள் பற்றிய விலையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்தனர். அதற்கு பாஜக தரப்பில் வழக்கம்போல மௌனமே பதிலாக கிடைத்தது.

கேள்விக்கு பதிலளிக்காமல் மீடியாக்களை மிரட்டிய அண்ணாமலை.. செய்தியாளர்களை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு !

தற்போது அண்ணாமலை கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை 5 லட்சம் ரூபாய் என தெரியவந்ததையடுத்து பலரும் அண்ணாமலைக்கு இவ்வளவு மதிப்புள்ள வாட்ச் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை, நான் தேசியவாதி. ரஃபேல் விமான பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட வாட்ச்சை கட்டியிருக்கின்றேன். உலகத்துலேயே 500 வாட்ச்கள் தான் இருக்கு, என்னோடது 149 வாட்ச் என்றார்.

கேள்விக்கு பதிலளிக்காமல் மீடியாக்களை மிரட்டிய அண்ணாமலை.. செய்தியாளர்களை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு !

இது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வந்தநிலையில், தற்போது அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது இது தொடர்பாக அவரிடம் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அண்ணாமலை செய்தியாளர்களை நோக்கி ஒருமையில் பேசத்தொடங்கினார்.

வேண்டும் என்றால் வீடியோ எடுங்கள் என்றும், உங்கள் காலில் எல்லாம் விழவில்லை என்றும் ஆவேசமானார். அதோடு, கேள்வி கேட்டவர்களை எந்த சேனல் என்று கேட்டு வாக்குவாதம் செய்த அண்ணாமலை, சில குறிப்பிட்ட சேனலின் பத்திரிகையாளர்களை தனியே அழைத்து மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியுள்ளார்.

கேள்விக்கு பதிலளிக்காமல் மீடியாக்களை மிரட்டிய அண்ணாமலை.. செய்தியாளர்களை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு !

அதோடு வழக்கம் போல அண்ணாமலை தவறான செய்தியை சொல்ல ஆதாரம் கேட்ட செய்தியாளரையும் கேள்விக்கு பதிலளிக்காமல் அண்ணாமலை மிரட்டியுள்ளார். மேலும், யார் உங்களுக்கு இப்போது போன் செய்தது ? உங்கள் போனை காட்டுங்கள் என்று கூறிய அண்ணாமலை செய்தியாளர்கள் தனது போனை காட்டுகிறேன் என்றதும் அப்படியே பேச்சை மாற்றிவிட்டார். மேலும், அவரை ஒருமையில் பேசியதோடு தவறான வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசியுள்ளார்.

அதன்பின்னர் டிஜிட்டல் மீடியா செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறாமல், 40 ஆயிரம் ரூபாய் கேமரா வாங்கிவந்து டிஜிட்டல் மீடியா என்று சொல்வது. நீங்கள் பேசுவது அநியாயம். youtube சேனலை இனி உள்ளே விடவேண்டாம் என்றும் கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சு தமிழக மக்களிடையே முகச்சுளிவை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories