தமிழ்நாடு

"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. அண்ணாமலை மலிவான தலைவர்": பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்!

அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என கூறி பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார்.

"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. அண்ணாமலை மலிவான தலைவர்": பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஊரே நாறும் அளவிற்கு பா.ஜ.கவின் உட்கட்சி பூசல் வெளியே வந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களும் வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க அசிங்கப்பட்டு கிடக்கிறது.

கே.டி.ராகவன் தொடங்கி, திருச்சி சூர்யா வரை பா.ஜ.க முக்கிய புள்ளிகள் மீது சொந்தக் கட்சி பெண் நிர்வாகிகளே புகார் அளித்துள்ள செய்திகள் எல்லாம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்து பா.ஜ.க நாறிக் கிடக்கிறது. இது எல்லாம் ஒரு கட்சியா? என்று பெண்களே பேசும் அளவிற்குத் தமிழ்நாட்டு பா.ஜ.க உள்ளது.

"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. அண்ணாமலை மலிவான தலைவர்": பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்!

இந்நிலையில் அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என கூறி காயத்ரி ரகுராம் பா.ஜ.கவில் விலகுவதாகத் அறிவித்தள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காகத் தமிழ்நாடு பா.ஜ.க-வில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்.

பா.ஜ.கவில் உள்ள உண்மையான தொண்டர்கள் பற்றிக் கவலைப்படுவதில்லை. கட்சியில் உண்மையாக இருப்பவர்களை விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக இருக்கிறது. அண்ணாமலை ஒரு மலிவான, பொய்யான தலைவர். அண்ணாமலை தலைமையில் பா.ஜ.கவில் உள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லை. உங்களை யாராவது காப்பாற்றுவார்கள் என்று நம்பாதீர்கள். யாரும் வரப் போவதில்லை.

என்னை தொந்தரவு செய்யும் வார் ரூமில் இருந்து வந்த அனைத்து வீடியோக்களையும் ஆடியோக்களையும் போலிஸில் வழங்கி புகார் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைத்து வந்ததால் அண்மையில் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து ஆறு மாதம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அண்ணாமலை மீது மீண்டும் பரபரப்பான குற்றச்சாட்டை வைத்து விட்டு பா.ஜ.க கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories