அரசியல்

SC/ST பிரிவினரை விட EWSக்கு குறைந்த கட்-ஆப் மதிப்பெண்: வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.கவின் உண்மை முகம்!

ரயில்வே வேலைவாய்ப்பில் SC/ST பிரிவினரை விட EWS பிரிவினருக்கு குறைந்த கட்ஆப் மதிப்பெண்களை நிர்ணயித்துள்ளது ஒன்றிய அரசு.

SC/ST பிரிவினரை விட EWSக்கு குறைந்த கட்-ஆப் மதிப்பெண்: வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.கவின் உண்மை முகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என்றும், இது சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை என்றும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இதையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதை நடைமுறைப் படுத்தக் கூடாது என வலியுறுத்தி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தன.

SC/ST பிரிவினரை விட EWSக்கு குறைந்த கட்-ஆப் மதிப்பெண்: வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.கவின் உண்மை முகம்!

இந்த மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி யு.யு.லலித், தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன.

பின்னர் அனைத்து வாதங்களும் முடிந்த பிறகு தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி தீர்ப்பளித்தது.

அதில், இந்த சட்டத்துக்கு ஆதரவாக நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா, பெல்லா திரிவேதி ஆகிய 3 பேர் ஆதரவாகவும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகிய இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.

SC/ST பிரிவினரை விட EWSக்கு குறைந்த கட்-ஆப் மதிப்பெண்: வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.கவின் உண்மை முகம்!

இந்நிலையில் ரயில்வே வேலைவாய்ப்பில் SC/ST பிரிவினரை விட 10% இட ஒதுக்கீடு பிரிவில் (EWS) பிரிவினருக்கு குறைந்த கட்-ஆப் மதிப்பெண்களை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே வாரியத்திற்கான குரூப் D தேர்வுகள் மூலம் 103769 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்கள் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து உடற் தகுதி தேர்வுகள் அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ளது.

இந்நிலையில், ரயில்வே வேலைவாய்ப்பில் SC/ST பிரிவினரை விட EWS பிரிவினருக்கு குறைந்த கட்-ஆப் மதிப்பெண்களை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SC/ST பிரிவினரை விட EWSக்கு குறைந்த கட்-ஆப் மதிப்பெண்: வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.கவின் உண்மை முகம்!

அதிலும் 10 மண்டலாமாக கட்-ஆப் மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்பட்டத்தில் சென்னை மண்டலத்தில்தான் EWS பிரிவினருக்கு குறைவான கட்-ஆப் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கட் ஆப் மதிப்பெண்ணால் SC/ST பிரிவினர் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை முறைபடுத்தினால் SC/ST பிரிவினர்களுக்கான சமூக நீதிகள் கிடைக்காது என்பதால்தான் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories