அரசியல்

2000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணமாக மாற்றப்படுகிறது -நாடாளுமன்றத்தில் பாஜக MP பகிரங்க குற்றச்சாட்டு !

2000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணமாக மாற்றப்படுவதால் அந்த நோட்டுகளை படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும் என பாஜக எம்.பி கோரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணமாக மாற்றப்படுகிறது -நாடாளுமன்றத்தில் பாஜக MP பகிரங்க குற்றச்சாட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, இரவு 8 மணியை இந்தியர்கள் யாரும் வாழ்நாளில் மறக்க முடியாது. அன்றுதான் கள்ள நோட்டை ஒழிக்கப் போவதாகக் கூறிய பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், புதிய 500, 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அறிமுகப்படுத்தியபோது ரொக்கப்பணத்தை ஒழித்து டிஜிட்டல் பணத்துக்கு மாறுவோம். கருப்பு பணத்தை ஒழிப்போம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி கருத்து தெரிவித்தார்.

2000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணமாக மாற்றப்படுகிறது -நாடாளுமன்றத்தில் பாஜக MP பகிரங்க குற்றச்சாட்டு !

ஆனால், அதன்பின்னர் வந்த ஆண்டுகளில் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தையே சீரழித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட சில மாதங்கள் போதிய மாற்று ஏற்பாடுகள் செய்யாததால் ரொக்க பணம் கிடைக்காமல் மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் அதன்பின்னர் பொருளாதார பிரச்சனையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து பழைய 500,1000 ரூபாய்களுக்கு பதிலாக புதிய 500,2000 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் 2000 ரூபாய் தாள் பெரிதாக மக்களுக்கு எந்த வகையிலும் உபயோகப்படவில்லை. அதிலும் குறிப்பாக சில்லரை மாற்ற பெரும் சிரமத்தை சந்தித்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கத் தொடங்கினர்.

2000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணமாக மாற்றப்படுகிறது -நாடாளுமன்றத்தில் பாஜக MP பகிரங்க குற்றச்சாட்டு !

மேலும், கடந்த 3 ஆண்டுகளாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கவே படவில்லை என்ற தகவலை ரிசர்வ் வங்கிவெளியிட்டது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணமாக மாற்றப்படுவதால் அந்த நோட்டுகளை படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும் என பாஜக எம்.பி கோரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பேசிய பா.ஜ.க எம்.பி சுஷில் குமார் மோடி, "நாட்டிலிருக்கும் பெரும்பாலான ஏ.டி.எம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகள் காணாமல்போய்விட்டன. விரைவில் அந்த நோட்டுகள் செல்லாது என்ற வதந்திகளும் வெளிவருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.

2000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணமாக மாற்றப்படுகிறது -நாடாளுமன்றத்தில் பாஜக MP பகிரங்க குற்றச்சாட்டு !

இது தவிர 2,000 ரூபாய் நோட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டு, போதைப்பொருள், பண மோசடி போன்ற சட்டவிரோத வர்த்தகங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இதனால், நாட்டிலேயே அதிக மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டு, கறுப்புப் பணத்துக்கு ஈடானதாக மாறிவிட்டது. எனவே 2,000 ரூபாய் நோட்டை அரசு படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும். மேலும், மக்கள் தங்களிடமிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அரசு இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்த கோரிக்கை பாஜகவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories