முரசொலி தலையங்கம்

முதலில் தெற்கில்தான் தோல்வி.. ஆனால் இப்போது வடக்கிலேயே பாஜகவுக்கு தோல்விதான் ! -முரசொலி தாக்கு !

இப்போது பாஜகவுக்கு வடக்கிலும் நிலைமை கவலைக்கிடமாக ஆகிவருவதைத்தான் இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

முதலில் தெற்கில்தான் தோல்வி.. ஆனால் இப்போது வடக்கிலேயே பாஜகவுக்கு தோல்விதான் ! -முரசொலி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (13-12-22)

இடைத்தேர்தல் முடிவுகள்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. பா.ஜ.க. எதிர்பார்த்த ஒரே மாதிரியான வெற்றியை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வழங்கவில்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த மெயின்புரி மக்களவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோற்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கதாலி, ராம்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் கதாலி தொகுதியில் பா.ஜ.க. தோற்றுள்ளது. ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ராம்பூர் சட்டமன்றத் தொகுதியை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது. இதுதான் உ.பி.யின் உண்மையான நிலவரம் ஆகும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சர்தார்சாகர் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த பானு பிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி வெற்றியைப் பெற்றுள்ளது.ஒடிசா மாநிலத்தில் பதம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோற்றுள்ளது. பிஜூ ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் தெற்கில்தான் தோல்வி.. ஆனால் இப்போது வடக்கிலேயே பாஜகவுக்கு தோல்விதான் ! -முரசொலி தாக்கு !

பீகார் மாநிலம் குக்ஹானி தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதுதான் இடைத்தேர்தல் நிலவரம் ஆகும்.நடந்து முடிந்த ஒரே ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியும், நடந்து முடிந்த ஆறு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றியும் பெற்றுள்ளது பா.ஜ.க. இந்த முடிவுகள் குறித்து பா.ஜ.க.வினர் பேசுவது இல்லை.

உ.பி.யில் சமாஜ் வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் மறைவுக்குப் பிறகு மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதி காலியானது. இதற்கு இடைத்தேர்தல் நடந்தது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக இருக்கும் மாநிலம் அது. இந்த தொகுதியில் முலாயம்சிங் மருமகளும், அகிலேஷ் மனைவியுமான டிம்பிள் போட்டியிட்டார். சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட இவருக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளராக ரகுராஜ்சிங் போட்டியிட்டார். பதிவான வாக்குகளில் 67 சதவிகித வாக்குகளை டிம்பிள் பெற்று விட்டார். உ.பி.யில் தங்களது வசம் இருந்த கதாலி தொகுதியை பா.ஜ.க. இழந்திருக்கிறது.

இவை அனைத்துக்கும் மேலாக டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியைச் சந்தித்துள்ளது. கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி, டெல்லி ஆகிய மூன்று மாநகராட்சிக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆனால் இப்போது டெல்லி என்பது ஒரே மாநகராட்சியாக இணைக்கப்பட்டு விட்டது. மொத்தம் 250 வார்டுகள். கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க. கையில் இருந்தது தலைநகர் டெல்லி. இப்போது தோல்வியைத் தழுவி இருக்கிறது பா.ஜ.க.

முதலில் தெற்கில்தான் தோல்வி.. ஆனால் இப்போது வடக்கிலேயே பாஜகவுக்கு தோல்விதான் ! -முரசொலி தாக்கு !

ஆம் ஆத்மி கட்சியானது 134 இடங்களைக் கைப்பற்றி டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. 104 இடங்களையே பா.ஜ.க.வால் பெற முடிந்துள்ளது. இந்த தோல்வியை ஏற்றுக் கொண்டு டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா பதவி விலகிவிட்டார். கட்சித் தலைமை இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது.

டெல்லியில் பிரபலமான பா.ஜ.க. எம்.பி.களான பிரவேஷ் வர்மா, ரமேஷ் பிதுரி, ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், மீனாட்சி லேகி ஆகியோரின் தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளார்கள். மொத்தம் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது டெல்லி. அதில் நான்கு தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் படுதோல்வியை அடைந்துள்ளார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள்.

டெல்லி, உ.பி, ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் தோல்வியைத் தழுவி உள்ளது பா.ஜ.க. பொதுவாக தெற்கை மறந்து விட்டு, வடக்கை மட்டுமே வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கும் கட்சி தான் பா.ஜ.க. இதோ இப்போது வடக்கிலும் நிலைமை கவலைக்கிடமாக ஆகிவருவதைத்தான் இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

முதலில் தெற்கில்தான் தோல்வி.. ஆனால் இப்போது வடக்கிலேயே பாஜகவுக்கு தோல்விதான் ! -முரசொலி தாக்கு !

‘நாட்டின் வளர்ச்சியின்மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்’ என்று சொன்னால் இந்த இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு வளர்ச்சியின் அளவுகோல் தெரியாமல் போனது எப்படி? ‘அனைத்து உலக நாடுகளும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் போது நாம் மட்டுமே வளர்ச்சியை சந்தித்து வருகிறோம்’ என்று சொல்லி வருகிறது பா.ஜ.க. அதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

‘உலகின் தலைசிறந்த நாடாக இந்தியாவை மாற்றிவிட்டோம்’ என்று கட்டமைக்க நினைக்கிறது பா.ஜ.க. அதனையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. இன்னமும் எல்லாப் பழிகளையும் எட்டாண்டுகளுக்கு முன்பு ஆண்ட காங்கிரஸ் கட்சி மீது போட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். இன்னமும் எல்லாப் பழிகளையும் 60 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஜவஹர்லால் நேரு மீது போட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முதலில் தெற்கில்தான் தோல்வி.. ஆனால் இப்போது வடக்கிலேயே பாஜகவுக்கு தோல்விதான் ! -முரசொலி தாக்கு !

கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்களை பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடக்கவிட்ட கொடூரம் என்பது கொரோனாவை விடக் கொடூரமானது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட போது மூன்று மாத காலம் இந்தியாவே நாயாய் –- பேயாய் அலைந்த அலைச்சலை மக்கள் மறக்க முடியுமா? இவற்றின் எதிரொலிதான் இந்த இடைத்தேர்தல் முடிவுகள்.

தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல பா.ஜ.க. என்பதையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மோடியின் பிம்பம் என்பது சாயம் வெளுத்துக் கொண்டு இருக்கிறது என்பதையே இவை காட்டுகின்றன. மக்கள் மனதை பிரச்சாரங்களின் மூலமாக மாற்ற முடியும் என்பதையே இவை காட்டுகின்றன. மொத்தத்தில் காலம் மாறும் என்பதையே காட்டுகின்றன!

banner

Related Stories

Related Stories