முரசொலி தலையங்கம்

"மாநில ஆளுநர்களின் அதிகாரப் பம்மாத்து.. நாளை பாஜகவுக்கே இந்த நிலை ஏற்படும்" -முரசொலி எச்சரிக்கை !

நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான மசோதாக்கள் அனைத்தையும் விவாதம் செய்யாமல் பாஜக அரசு நிறைவேற்றி விடுவதாக முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

"மாநில ஆளுநர்களின் அதிகாரப் பம்மாத்து.. நாளை பாஜகவுக்கே இந்த நிலை ஏற்படும்" -முரசொலி எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (10-12-22)

‘பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்தாக வேண்டும்’ என்று, அவர்களுக்கான கூட்டத்தில் பிரதமரே சொன்னார். ‘தங்கள் துறைதொடர்பான நேரங்களில்கூட அந்தத் துறை அமைச்சர்கள் அவைக்கு வரவில்லை’ என்று மாநிலங்களவையிலேயே அவைத் தலைவர் வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.

‘’தங்கள் துறை தொடர்பான தகவல்களை அவையில் தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தால் அமைச்சர்கள் அவைக்கு வர வேண்டும். அவர்கள் அவைக்கு வராமல் வேறு ஒருவரை வைத்து தகவல்களைத் தாக்கல் செய்ய வைக்கிறார்கள். தவிர்க்க முடியாமல் எப்போதாவது நடந்தால் பரவாயில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் அவைத்தலைவருக்கு முன்கூட்டியே சொல்லி அனுமதி வாங்க வேண்டும். அவைக்கு வராமல் இருப்பது தற்செயலானதாகவோ வழக்கமானதாகவோ இருக்கக் கூடாது. இதுபோன்ற செயல்களை இனி நான் அனுமதிக்க மாட்டேன்” என்று அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் முன்பு சொல்லி இருந்தார்.

"மாநில ஆளுநர்களின் அதிகாரப் பம்மாத்து.. நாளை பாஜகவுக்கே இந்த நிலை ஏற்படும்" -முரசொலி எச்சரிக்கை !

மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. அதனை ஒற்றைவரியில் திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு. அதனை நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தி பின்னர் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். கருத்துப் பரிமாற்றம் இல்லாமல் திரும்பப் பெற்றுவிட்டார்கள். இப்படித்தான் நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான மசோதாக்கள் அனைத்தையும் விவாதம் செய்யாமல் நிறைவேற்றி விடுகிறார்கள்.

லக்கீம்பூர் படுகொலை -– பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை – லடாக் விவகாரம் – - விலைவாசி உயர்வு -– பெகாஸஸ் விவகாரம் - மீனவர் படுகொலை –- 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஆகியவைகுறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் நடத்தப்படவில்லை.

‘’பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளும் மசோதாக்களின்மூலமாக மாநிலங்களைக் கட்டாயப்படுத்த ஒன்றிய அரசு முயற்சிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி உள்ளது” – என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சொல்லி இருக்கிறார்.

"மாநில ஆளுநர்களின் அதிகாரப் பம்மாத்து.. நாளை பாஜகவுக்கே இந்த நிலை ஏற்படும்" -முரசொலி எச்சரிக்கை !

‘’நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பான்மை பலம் இருப்பதால் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் தேர்வுக் குழுக்களின் அறிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. இதனால் நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, அதன் மதிப்பும் தன்மானமும் பாதுகாக்கப்படுமா என்ற அச்சம் நிலவுவதாக” மம்தா பானர்ஜி சொல்லி இருக்கிறார்.மாநிலங்களின் பிரச்சினைகள்குறித்து அதிகளவில் விவாதிக்க வேண்டும் என்பது மேற்கு வங்க முதலமைச்சரின் கோரிக்கையாக இருக்கிறது. இதனையே தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களும் விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.“தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு உரிய நிதி உதவிகள் செய்வது, இந்தித் திணிப்பு, ஆளுநர் விவகாரங்கள், பத்து சதவிகித இடஒதுக்கீடு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்” டி.ஆர்.பாலு அவர்கள்.

“இந்தக் கூட்டத் தொடரில் 25 மசோதாக்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. அரசு. இதனை விவாதிப்பார்களா, அல்லது பெரும்பான்மை பலம் கொண்டு நிறைவேற்றிவிடுவார்களா என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது. கூட்டுறவு மசோதா, வனப்பாதுகாப்பு மசோதாவை உடனடியாகத் தாக்கல் செய்யக் கூடாது” என்று டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்திருக்கிறார்.

மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. வரி நிலுவைத் தொகைகள்குறித்து, நாளுக்கு நாள் அதிகமாக உயர்ந்துவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து, விலைவாசி உயர்வுகள் குறித்து இந்திய நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் நடத்திவரும் அதிகாரப் பம்மாத்துகள் குறித்து இந்திய நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டாமா? நாளை பா.ஜ.க.வுக்கே இந்தக் கதி ஏற்படாதா?

"மாநில ஆளுநர்களின் அதிகாரப் பம்மாத்து.. நாளை பாஜகவுக்கே இந்த நிலை ஏற்படும்" -முரசொலி எச்சரிக்கை !

சட்டமசோதாக்களை விவாதம் இல்லாமல் நிறைவேற்றி விடுவதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.“விவசாய மசோதாக்கள் இருதரப்பினரும் ஒப்புக்கொள்ளாதபோது விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. இரு தரப்பும் ஒப்புக் கொண்ட போது அவை, விவாதம் இல்லாமல் ரத்து செய்யப்பட்டன” என்றார் ப.சிதம்பரம்.இதுதான் இன்றைய நாடாளுமன்ற ஜனநாயகமாக உள்ளது. முறையான விவாதம் இல்லாமல் தீர்ப்பாயங்களின் செயல்பாடுகுறித்த சட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக உச்சநீதி மன்றத்தால் ஒன்றிய அரசு கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.

‘’எந்த விவாதங்கள் இன்றியும் சட்டங்கள் வேகவேகமாக இயற்றப்படுகின்றன. விவாதங்கள் இல்லாமல் நிறைவேறும் சட்டங்களால் பல்வேறு குழப்பங்கள் எழுகின்றன. சட்டம்குறித்த தெளிவு இல்லாததால் ஒரு சட்டம் ஏன் இயற்றப்படுகிறது என எங்களுக்கே தெரியவில்லை’’ – என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோதே நீதியரசர் ரமணா பேசினார். சிறு- – குறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்களைப் பற்றிய புதிய ‘திவால் சட்டத்திருத்த மசோதா- – 2021’ என்பது ஐந்தே நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டதைப் பார்த்தோம். விரைவில் சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தப் போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி இருக்கிறார். இதே ஐந்து நிமிடங்கள் அதற்கும் போதும். இதே வழிமுறையைத்தான் பா.ஜ.க. பின்பற்றப் போகிறதா? ‘விவாதங்கள் தேவை; விவாதமே ஆக்கப் பூர்வமானது’ என்று எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் அவர்கள் சொல்ல ஆரம்பித்திருப்பது மிக நல்ல மாற்றம் ஆகும். அத்தகைய சொற்கள் உண்மையானவைதானா என்பதை அடுத்தடுத்த நாட்கள் நிரூபித்துவிடும்.

காத்திருப்போம்! கவனிப்போம்

banner

Related Stories

Related Stories