அரசியல்

உங்கள் காலில் விழவேண்டுமா? GST கொடுப்பதையே நிறுத்திவிடுவோம் -ஒன்றிய அரசுக்கு மம்தா பானர்ஜீ எச்சரிக்கை !

எங்களாலும் ஜிஎஸ்டி வரியை கொடுப்பதை நிறுத்தி வைக்க முடியும் என ஒன்றிய அரசுக்கு மம்தா பானர்ஜீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் காலில் விழவேண்டுமா? GST கொடுப்பதையே நிறுத்திவிடுவோம் -ஒன்றிய அரசுக்கு மம்தா பானர்ஜீ எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது. இப்படி மக்களிடம் சுரண்டப்படும் ஜி.எஸ்.டி வரியில் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை உரிய காலத்தில் கொடுக்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்து வருகிறது.

உங்கள் காலில் விழவேண்டுமா? GST கொடுப்பதையே நிறுத்திவிடுவோம் -ஒன்றிய அரசுக்கு மம்தா பானர்ஜீ எச்சரிக்கை !

அதிலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதிக அளவில் ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி வரியை அளித்துவரும் நிலையில். அதில் தமிழ்நாட்டுக்கு கொடுக்கவேண்டிய பங்கு வராததால் பல மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாஜக ஆளான அனைத்து மாநிலங்களையும் இந்த வகையிலேயே பாஜக வஞ்சித்து வருகிறது.

இந்த நிலையில், பழங்குடியினர் நலத்திட்டத்தில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜிஎஸ்டி-யை வழங்காத ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஜிஎஸ்டி தொகைக்காக பாஜகவின் காலில் விழந்து, கெஞ்ச வேண்டுமா?" நாம் ஜனநாயகத்தில் தான் வாழ்கிறோமா? அல்லது இந்தியா 'ஒரு கட்சி' நாடாக மாறிவிட்டதா?

உங்கள் காலில் விழவேண்டுமா? GST கொடுப்பதையே நிறுத்திவிடுவோம் -ஒன்றிய அரசுக்கு மம்தா பானர்ஜீ எச்சரிக்கை !

ஓராண்டுக்கு முன், பிரதமரை நேரில் சென்று சந்தித்தேன். ஆனால் எந்த பயனும் இதுவரை இல்லை.எங்களின் ஜிஎஸ்டி தொகையை எங்களிடம் கொடுங்கள். இல்லையெனில், ஜிஎஸ்டியை ரத்து செய்யுங்கள். 100 நாள் வேலைத் திட்டத்துக்கான எங்கள் நிலுவைத் தொகையை நீங்கள் உடனடியாக வழங்க வேண்டும்" என ஆக்ரோஷமாக பேசினார்.

மேலும், "மாநிலத்துக்கு சேர வேண்டிய வரி தொகையை நீங்கள் நிறுத்தி வைத்து எங்களை நீங்கள் மிரட்டலாம்.அதேபோல எங்களாலும் ஜிஎஸ்டி வரியை கொடுப்பதை நிறுத்தி வைக்க முடியும். வங்காள மக்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்ந்தால், ஒரு நாள், அத்தகைய அரசியல்வாதிகள் காணாமல் போய் பூஜ்ஜியமாகிவிடுவார்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories