அரசியல்

3 நீதிபதிகள் ஆதரவு.. 2 நீதிபதிகள் எதிர்ப்பு: 10% இட ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

10% இட ஒதுக்கீட்டு வழக்கில் 3 நீதிபதிகள் செல்லும் என்றும் 2 நீதிபதிகள் செல்லாது என மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

3 நீதிபதிகள் ஆதரவு.. 2 நீதிபதிகள் எதிர்ப்பு: 10% இட ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என்றும், இது சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை என்றும் கூறி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன.

பின்னர் இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி யு.யு.லலித், தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன. அரசியல் சாசன அமர்வு முன்பு தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்களது வாதங்களை முன்வைத்தன. பொருளாதார இடஒதுக்கீடு கூடாது என்பதை முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும், இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பது அல்ல, பின் தங்கிய சமூகத்தை உயர்த்துவதே இடஒதுக்கீட்டின் நோக்கம் என்றும் தி.மு.க தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதில், இந்த சட்டத்துக்கு ஆதரவாக நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா, பெல்லா திரிவேதி ஆகிய 3 பேர் ஆதரவாகவும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகிய இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.

முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம் என்றும், முன்னேறிய வகுப்பினருக்கு இரட்டைச் சலுகை வழங்கும் இந்த சட்டம் செல்லாது என்றும் நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் நீதிபதி ரவீந்திர பட் குறிப்பிட்டுள்ளார். மேலும் 10% இட ஒதுக்கீடு சட்டம் இட ஒதுக்கீட்டின் அடிப்படை கட்டமைப்பையே மீறுவதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி ரவீந்திர பட் கருத்தை ஆதரிப்பதாக தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இதையடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் வில்சன்," பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டோம் என்றும் இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புக்கான திட்டம் கிடையாது என்றும் கூறினார். முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதால் மற்ற சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories