அரசியல்

“கார்களில் போலிஸ் ஸ்டிக்கர்ஸ்” - Tollgate கட்டணத்திற்கு பயந்து பா.ஜ.க-வினர் செய்த மோசடி அம்பலம்!

சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதிலிருந்து தப்பிக்க புதுச்சேரி மாநில பாஜகவினர் தங்களது கார்களில் போலியாக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

“கார்களில் போலிஸ் ஸ்டிக்கர்ஸ்” - Tollgate கட்டணத்திற்கு பயந்து பா.ஜ.க-வினர் செய்த மோசடி அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பிராந்தியம் கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாஹேவில் நடைபெற்ற புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் பங்கேற்பதற்காக, புதுச்சேரியிலிருந்து குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் சரவண குமார் சென்றார்.

அப்போது அவருடன் 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் சென்றுள்ளனர். இதனிடையே அமைச்சருடன் மாஹேவுக்கு சென்ற பா.ஜ.கவினர் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க பா.ஜ.க கொடி பொருத்திய தங்களது சொந்த வாகனங்களில், போலிஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சென்ற மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

“கார்களில் போலிஸ் ஸ்டிக்கர்ஸ்” - Tollgate கட்டணத்திற்கு பயந்து பா.ஜ.க-வினர் செய்த மோசடி அம்பலம்!

புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கு சுமார் 700 கி.மீ தொலைவு உள்ள நிலையில் தமிழகம், கேரள மாநிலங்களில் உள்ள சுமார் 10 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி களில் பா.ஜ.க-வினர் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அரசாங்க வாகனம் தவிர்த்து, 3க்கும் மேற்பட்ட தங்களது சொந்த கார்களில் பா.ஜ.க-வினர் போலிஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

பா.ஜ.க கொடி பொருத்திய தங்களது சொந்த வாகனங்களில், போலிஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சென்ற மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories