அரசியல்

“5 ஆண்டுகளில் இந்தியாவில் 388 தீவிரவாதத் தாக்குதல்கள்..” : பாஜக ஆட்சி எத்தனை முறை டிஸ்மிஸ் ஆகியிருக்கும்?

2020 ஆண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகள் சார்பில் 398 தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளதாக ஒன்றிய அரசின் (19.9.2022) அறிக்கையே சொல்கிறது. இதில் 71 பாதுகாப்புப் படையினர், 80பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள்.

“5 ஆண்டுகளில் இந்தியாவில் 388 தீவிரவாதத் தாக்குதல்கள்..” : பாஜக ஆட்சி எத்தனை முறை டிஸ்மிஸ் ஆகியிருக்கும்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

குரங்கு... நாய்... பேய்... என்றால் யார் என்று உங்களுக்கே அடையாளம் தெரியும். 'அவர் தான் உளறி இருக்கிறார்" கோவையில் தற்கொலைத் தாக்குதல் நடந்தியிருந்தால் இந்த ஆட்சி டிஸ்மிஸ் ஆகியிருக்கும்" என்று!

அவர் 2014 முதல் இந்தியாவில்தான் இருக்கிறாரா? இருந்திருந்தால் வெட்கமில்லாமல் இதனைச் சொல்லி இருக்கமாட்டார். பா.ஜ.க. ஆட்சி அமைந்த பின்னால் இது போன்ற தாக்குதல் இந்தியாவில் அதிகமாக நடக்கிறது என்பதை அவர்களது ஒன்றிய உள்துறையின் அறிக்கைகளே சொல்கிறது. இதை வைத்துப் பார்த்தால் பா.ஜ.க. ஆட்சி எத்தனை முறை கலைக்கப்பட்டிருக்க வேண்டும்!

“5 ஆண்டுகளில் இந்தியாவில் 388 தீவிரவாதத் தாக்குதல்கள்..” : பாஜக ஆட்சி எத்தனை முறை டிஸ்மிஸ் ஆகியிருக்கும்?

* 2016 சனவரி 2 ஆம் நாள் நடந்தது பதான்கோட் தாக்குதல். இதில் 7 பாதுகாப்பு படை வீரர்களும் 6 தீவிரவாதிகளும் இறந்தார்கள். தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையில் வந்தார்கள். மறுநாள் கைவினை குண்டு வெடித்து மேலும் ஒரு வீரர் இறந்தார். அதற்கு மறுநாள் வான்படைத்தளத்தை மீட்கும் நடவடிக்கை நடந்தது.

* 2016 பிப்ரவரியில் பொம்பொரியில் 8 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

* 2016 செப்டம்பரில் உரியில் இருக்கும் இந்திய ராணுவத் தலைமையகத்தில் நடந்த தாக்குதலில் 19 படைவீரர்கள் பலியானார்கள்.

* 2017 ஏப்ரல் 24 அன்று இந்தியப் பாது காப்புப் படையினர் மீது சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் பலியானார்கள்.

* 2017 போபால் உற்ஜைனி தொடர் வண்டியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் காயம் அடைந்தார்கள்.

* 2017 அமர்நாத் கோவில் தாக்குதலில் 7 பேர் பலியானார்கள்.

*2017 லெத்திபோரா கமாண்டோ பயிற்சி நிலைய தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.

* 2019 பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதல் நடந்தது. ஒரு தற்கொலை தீவிரவாதி தாக்கியதில் 40 படைவீரர்கள் பலியானார்கள்.

* 2021 அக்டோபர் மாதத்தில் பொதுமக்கள் 11 பேர் பலியானார்கள்.

* 2022 ஆகஸ்ட் 11 இரஜோரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளார்கள்.

“5 ஆண்டுகளில் இந்தியாவில் 388 தீவிரவாதத் தாக்குதல்கள்..” : பாஜக ஆட்சி எத்தனை முறை டிஸ்மிஸ் ஆகியிருக்கும்?

இப்படிமிக நீண்ட பட்டியல் இருக்கிறது பா.ஜ.க ஆட்சி கால வேதனைகளைச் சொல்வதற்கு? - 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிரவாதிகள் தாக்குதல் அதிகமாக நடந்துள்ளது இந்தியாவில்.

2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி பயங்கரவாத தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் 75 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

2017 ஆம் ஆண்டில் நடந்த மொத்த தீவிரவாத தாக்குதல்களில் 318 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

2018 ஆம் ஆண்டில் மட்டும் 451 பேர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த ஆண்டு பலியானவர் எண்ணிக்கைதான் அதிகம்.

2020 ஆண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகள் சார்பில் 398 தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளதாக ஒன்றிய அரசின் (19.9.2022) அறிக்கையே சொல்கிறது. இதில் 71 பாதுகாப்புப் படையினர், 80பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள்.

“5 ஆண்டுகளில் இந்தியாவில் 388 தீவிரவாதத் தாக்குதல்கள்..” : பாஜக ஆட்சி எத்தனை முறை டிஸ்மிஸ் ஆகியிருக்கும்?

இந்தியாவில் நடந்து வரும் நக்சல் தீவிரவாதச் செயல்களில் உயிரிழப்பை 200 என்ற எண்ணிக்கைக்கும் குறைவாக குறைத்துள்ளதை தனது சாதனையாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆய்வுக்கூட்ட அறிக்கை (26.9.2022) தான் இதனைச் சொல்கிறது.

3க்கும் மேல் ஒருவர் இறந்தால் அதனை பெரிய தாக்குதல் என்பார்கள். 2014 - 18 காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் 388 பெரிய தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? ஒன்றிய பா.ஜ.க. அரசு அல்லவா?

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் 150 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதன் மூலமாக ஆயுதங்களும், போதை மருந்துகளும் கடத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியானதே. இதைத் தடுக்க வேண்டியது யார் பொறுப்பு? இவை அனைத்தையும் பார்க்க கண்ணையோ கேட்க காதையோ பயன்படுத்தாத 'அது' வாயையும் மூடிக்கொள்வதே சரியாக இருக்கும்!

“5 ஆண்டுகளில் இந்தியாவில் 388 தீவிரவாதத் தாக்குதல்கள்..” : பாஜக ஆட்சி எத்தனை முறை டிஸ்மிஸ் ஆகியிருக்கும்?

இந்த தீவிரவாதிகளுக்கு ஆயுதம் எப்படி கிடைக்கிறது? எல்லைக்கு வெளியில் இருந்து என்றால், எல்லையைக் காப்பது யாருடைய பொறுப்பில் இருக்கிறது? இந்த தீவிரவாதிகளுக்கு பணம் எப்படி கிடைக்கிறது? பணமதிப்பிழப்பு என்பதே தீவிரவாதத்தை ஒழிக்கத்தான் என்று சொன்னீர்களே? ஏன் தீவிர வாதம் ஒழியவில்லை ?

டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இண்டர்போல் பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், “தீவிரவாதத்தை இந்தியாவில் முழுமையாக ஒழித்துவிட்டேன்' என்று சொல்லவில்லை . 'பயங்கரவாதிகளின் புகலிடங்களை ஒழிப்பதில் அதிவேகம் வேண்டும்' என்றுதான் பேசி இருக்கிறார்.

“நாட்டின் எல்லைக்கு, மாநிலங்களின் எல்லைக்குவெளியில் இருந்து வரும் குற்றங்களை திறமையுடன் கையாளும் பொறுப்பு மத்திய - மாநில அரசுகளின் கையில்தான் இருக்கிறது' என்று உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் பேசி இருக்கிறார். பேய்கள் இதனை முதலில் படிக்க வேண்டும்!

- ப.திருமாவேலன்

banner

Related Stories

Related Stories