அரசியல்

“நாக்பூர் பேரணி - அம்பலமாகும் உண்மைகள்” : RSS-ன் போலி முகத்திரையை அம்பலப்படுத்திய விடுதலை ராஜேந்திரன் !

இன்று வரையிலும் சுவயம் சேவக்காக ஒரு பெண் ஆர்.எஸ்.எஸ். இல் உறுப்பினராக முடியாது

“நாக்பூர் பேரணி - அம்பலமாகும் உண்மைகள்” : RSS-ன் போலி முகத்திரையை அம்பலப்படுத்திய விடுதலை ராஜேந்திரன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் நடத்த விரும்பிய அணிவகுப்புகளும், அதற்கு தமிழ்நாடு அரசு விதித்த தடை வித்த சம்பவத்தை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உண்மை முகத்திரையை பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் பேரணி குறித்தும், காந்தியை கொன்ற கூட்டத்துக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தி கட்டுரை ஒன்றை தீட்டியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து “இன்று வரையிலும் சுவயம் சேவக்காக ஒரு பெண் ஆர்.எஸ்.எஸ். இல் உறுப்பினராக முடியாது” என்பது பற்றி திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளரும், புரட்சிப் பெரியார் முழக்கம் வார ஏட்டின் ஆசிரியர் விடுதலை இராசேந்திரன் இதுதொடர்பாக முகநூலில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “ 1925 ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி அன்று தான் ஆர்.எஸ்.எஸ் நாக்பூரில் துவக்கப்பட்டது. எனவே விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் மிகப்பெரிய விழாக்களை நடத்துவது வழக்கம். இன்று நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி பேரணியை தொலைக்காட்சிகள் வெளியிட்டன. அதில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.

“நாக்பூர் பேரணி - அம்பலமாகும் உண்மைகள்” : RSS-ன் போலி முகத்திரையை அம்பலப்படுத்திய விடுதலை ராஜேந்திரன் !

'ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்திலிருந்து முதன் முறையாக பேரணியை பார்வையிடுகிற பார்வையாளர்களில் ஒரு பெண் இப்போது தான் அழைக்கப்பட்டு இருக்கிறார்' என்ற செய்தியை தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் பங்கெடுப்பதற்கு பார்வையாளராகவே ஒரு பெண் அழைக்கப்பட்டிருப்பது 1925 க்குப் பிறகு இதுவே முதல் முறை.

ஆர்.எஸ்.எஸ் இல் பெண்கள் யாரும் உறுப்பினராக முடியாது என்ற தடை அப்படியே இப்போதும் நீடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் பேரணி அணிவகுப்பையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அதில் 'சுவயம் சேவக்காக' ஒரு பெண் கூட வரவில்லை. ஆனால், இங்கே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பெண்களுக்காக ஆர்.எஸ்.எஸ் தனி அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறது என்று அதற்கு ஒரு பதிலை கூறுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் உண்மையில் 'ராஷ்ட்ர சேவிகா சமிதி' என்ற தனி பெண்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கியது. அது குடும்ப ரீதியாக செயல்பட்ட அமைப்பு ஆகும். ஒரு பெண் என்பவர் ஒரு நல்ல மனைவியாகவும், மகளாகவும், தாயாகவும் குடும்பத்துக்குள் செயல்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்பது தான் ஆர்.எஸ்.எஸ் இன் தொடக்க கால கொள்கையாக இருந்தது.

“நாக்பூர் பேரணி - அம்பலமாகும் உண்மைகள்” : RSS-ன் போலி முகத்திரையை அம்பலப்படுத்திய விடுதலை ராஜேந்திரன் !

அயோத்தி பிரச்சனையில் பெண்களை ஈடுபடுத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ் பெண்களுக்காக தனியாக 5000 ஷாகாக்களை நடத்தியது. "இந்துப் பெண்களே வீரத்தையும், நல்லொழுக்கத்தையும் விதைக்கப் போர்க் குரல் எழுப்புங்கள்" என்ற முழக்கத்தோடு அயோத்தி பிரச்சனையில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

கர சேவை செய்ய வந்தவர்களுக்கு உணவு தயாரிக்க பெண்களை குடும்பத்தோடு ஈடுபடுத்தினார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்களுக்கு உள்ள நிலை.

இன்று வரையிலும் சுவயம் சேவக்காக ஒரு பெண் ஆர்.எஸ்.எஸ். இல் உறுப்பினராக முடியாது. ஆண்கள் மட்டும் தான் உறுப்பினராக முடியும். பெண்களுக்கென்று தனி துணை அமைப்புகளை வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர சுவயம் சேவக்காக பெண்கள் வர முடியாது. பார்வையாளராகவும் பெண் ஒருவர் இப்போது தான் அழைக்கப்பட்டிருக்கிறார்.

இப்படி சமூகத்தில் சரிபகுதியாக இருந்த பெண்களை புறக்கணித்து அவர்களை புண்படுத்துகிற கூட்டம் தான் இந்துக்களை புண்படுத்துகிறார்கள், இந்துக்களை புண்படுத்துகிறார்கள் என்று கூக்குரல் போட்டு வருவதை நாம் கவனிக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories