அரசியல்

'உங்களுக்கு எங்கள் வரலாறு தெரியாது'.. ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை விளாசி தள்ளிய வைகோ!

இந்தி திணிப்பை எதிர்த்து பேராட்டம் நடத்தப்போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

'உங்களுக்கு எங்கள் வரலாறு தெரியாது'.. ஒன்றிய அமைச்சர்  அமித்ஷாவை விளாசி தள்ளிய வைகோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-

"இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம் என அமித்ஷா கூறுகிறார். அமித்ஷா அவர்களே, உங்களுக்கு எங்கள் வரலாறு தெரியாது. இந்தியை எதிர்த்து நாங்கள் ரத்தம் சிந்தியிருக்கிறோம் அந்த ரத்தம் வீண் போகாது. இந்த மண்ணில் இந்தியை உங்களால் திணிக்க முடியாது; திணிக்க முயன்றால் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து சென்னையில் விரைவில் மதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

750 பக்கங்கள் கொண்ட இந்து சாம்ராஜ்ய கொள்கை வெளிவந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அதன்படி, கிறிஸ்துவ முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கிடையாது. சமஸ்கிருதம், இந்தி மட்டும்தான் இருக்கும். இந்தி சாம்ராஜ்யம் போய் தற்போது இந்து சாம்ராஜ்யம் வந்துவிட்டது. அதன் பெயரால் பலர் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

'உங்களுக்கு எங்கள் வரலாறு தெரியாது'.. ஒன்றிய அமைச்சர்  அமித்ஷாவை விளாசி தள்ளிய வைகோ!

விடுதலை நாள் ஊர்வலத்தில் அரசு விளம்பரத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் புகைப்படத்தை மத்திய அரசு வைக்கவில்லை. ஆனால், ஆங்கிலேயர்களிடம் அடிமை சேவகம் எழுதி கொடுத்துவிட்டு அவர்கள் வழங்கிய பிச்சை காசை ஓய்வூதியமாக பெற்றுக்கொண்ட சாவர்கரை புரட்சிக்காரர் சாவர்கர் என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு உள்ளது. 'நாட்டின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக உள்ளார்' என பாராட்டும் அளவு தளபதி ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.

நம் பிரதமர் சாமர்த்தியமானவர், கெட்டிகாரர். தமிழர்களுக்கு திருக்குறள், புறநானூறு பிடிக்கும் என்பதால், திருக்குறளையும் புறநானூறையும் பாராட்டுகிறார். ஆனால் இது அவரது உள்ளத்தில் இருந்து வந்த உண்மையா? இல்லை தமிழர்களை ஏமாற்றுவதற்காக மட்டும்தான்.

'உங்களுக்கு எங்கள் வரலாறு தெரியாது'.. ஒன்றிய அமைச்சர்  அமித்ஷாவை விளாசி தள்ளிய வைகோ!

ராணுவத்திற்கு அதிக செலவு செய்ததால் தான் இலங்கை பொருளாதாரப் சிக்கலில் சிக்கியுள்ளது என சர்வதேச மனித உரிமை சங்கம் கூறியுள்ளது. எனவே ராணுவத்திற்கான செலவை அவர்கள் குறைத்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் என அது தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உணவு, மருந்து கொடுங்கள்; நான் வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது எந்த நாடாவது உணவு மருந்து கொடுத்தார்களா? இலங்கையில் உள்ள தமிழக பகுதிகளில் இருந்து சிங்கள ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும். மேலும் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.

இந்திய அரசு தனது வெளிநாட்டு கொள்கையை மாற்றி கொள்ள வேண்டும். இலங்கைக்கு ஆதரவு கொடுக்கக்கூடாது. சிங்கள அரசு தமிழர்களை கொலை செய்த அரசு.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories