அரசியல்

"OPS எப்போவாச்சும் உண்மைய பேசுவாரு" : தி.மு.கவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட ஓ.பன்னீர்செல்வம்!

10 ஆண்டுகால அவல ஆட்சியை எண்ணிப் பார்த்து எடை போட்டு உள்ளாட்சித் தேர்தலில் வாக்களியுங்கள் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

"OPS எப்போவாச்சும் உண்மைய பேசுவாரு" : தி.மு.கவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட ஓ.பன்னீர்செல்வம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்., 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

நெல்லை, தென்காசி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாய் தவறி உண்மையைச் சொல்லி வாக்கு சேகரித்துள்ளார்.

10 ஆண்டுகால அவல ஆட்சியை எண்ணிப் பார்த்து எடை போட்டு உள்ளாட்சித் தேர்தலில் வாக்களியுங்கள் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க தலைமையிலான அரசுதான். ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என தலைமைவகித்த இந்த ஆட்சியின் அவலங்கள் ஏராளம்.

இந்த அவல ஆட்சியை ஒழித்துக்கட்டும் விதமாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவை புறக்கணித்த மக்கள் தி.மு.கவுக்கு பெரும் வரவேற்பு அளித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. 10 ஆண்டுகளாக அல்லல்பட்டு வந்த மக்கள் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

மக்களின் உணர்வை புரிந்துகொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் பரப்புரையின்போது உண்மையைப் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories