அரசியல்

”தமிழகத்தை பா.ஜ.க அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது” - தி.மு.கவில் மீண்டும் இணைந்தார் கு.க.செல்வம்!

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கு.க.செல்வம் இன்று மீண்டும் தி.மு.கவில் இணைந்தார்.

”தமிழகத்தை பா.ஜ.க அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது” - தி.மு.கவில் மீண்டும் இணைந்தார் கு.க.செல்வம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம், பா.ஜ.கவில் இருந்து விலகி, தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மீண்டும் தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் கு.க.செல்வம்.

கு.க.செல்வம் தி.மு.கவில் தலைமை நிலைய அலுவலக செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

கடந்த 2020ஆம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்த இவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தி.மு.கவில் இணைந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை பா.ஜ.க அரசு முற்றிலும் புறக்கணிக்கிறது. நீட், வெள்ள நிவாரண நிதி உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய அரசைக் கண்டித்து அக்கட்சியில் இருந்து விலகினேன். தாய் வீட்டிற்கு வந்த உணர்வோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் செயல்படுவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories