அரசியல்

தாலிபன் மாடலை கையில் எடுக்கிறதா பா.ஜ.க? திரிபுரா BJP எம்.எல்.ஏவின் பேச்சால் எழுந்த சர்ச்சை!

தாலிபன்கள் பாணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை தாக்க வேண்டும் என திரிபுரா மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ அருண் சந்திர பவுமிக் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாலிபன் மாடலை கையில் எடுக்கிறதா பா.ஜ.க? திரிபுரா BJP எம்.எல்.ஏவின் பேச்சால் எழுந்த சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரிபுரா மாநிலத்தில் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அங்கு தங்களது பலத்தை ஏற்படுத்த இப்போதிருந்தே பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் புதிய ஒன்றிய சமூகநிதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக பிரதிமா பவுமிக் பதவியேற்றதை அடுத்து அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அப்போது பேசிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான அருண் சந்திர பவுமிக், “திரிபுராவில் பிப்லப் தேப் தலைமையிலான அரசை சாய்க்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முயற்சிக்கிறார்கள். ஆகவே அவர்களை தாலிபன்கள் பாணியில் பாஜகவினர் தாக்க வேண்டும். அகர்தலா விமான நிலையத்தில் அவர்கள் இறங்கியதும் நம் அரசாங்கத்தை காப்பாற்ற இதனை நாம் செய்ய வேண்டும்.” என கூறியுள்ளார்.

தாலிபன் மாடலை கையில் எடுக்கிறதா பா.ஜ.க? திரிபுரா BJP எம்.எல்.ஏவின் பேச்சால் எழுந்த சர்ச்சை!

அருண் சந்திர பவுமிக்கின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு கடுமையான கண்டனங்களுக்கும் ஆளாகியுள்ளது. இந்த சர்ச்சை பேச்சு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் ரிதா பிரதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், திரிணாமுல் தலைவர்களை தாக்குவதற்கென பாஜக தனி குண்டர் படையையே ஏவியிருக்கிறது. அதன்படி திரிபுராவுக்கு சென்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் கார் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. அண்மைக்காலமாக திரிபுரா மக்களிடத்தில் பாஜகவின் மவுசு எடுபடவில்லை. அந்த விரக்தியில் இவ்வாறான தாக்குதல்களை பாஜக நடத்துக்கிறது.

மேலும் உலகம் முழுவதும் தாலிபன்களுக்கு எதிரான நிலைப்பாடு நிலவி வரும் நிலையில் பாஜக எம்.எல்.ஏவின் பேச்சின் மூலம் ஒன்றிய மோடி அரசு தாலிபன்களுக்கு ஆதரவாக இருக்கிறதா என்ற ஐயப்பாட்டை எழுப்பியுள்ளது. ஏனெனில் தாலிபன்களை போன்று பாஜகவிடம் அதிநவீன ஆயுதங்கள் இருந்தாலும் ஆச்சர்யமில்லை.” என அவர் கடுமையாக சாடியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories