அரசியல்

ட்ரெண்டிங்கில் #சிமெண்டா_விபூதியா_பன்னீரு : OPS-ஐ கைது செய்ய வலுக்கும் வலியுறுத்தல்கள்!

சென்னை புளியந்தோப்பு கட்டடம் குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் #சிமெண்டா_விபூதியா_பன்னீரு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ட்ரெண்டிங்கில் #சிமெண்டா_விபூதியா_பன்னீரு : OPS-ஐ கைது செய்ய வலுக்கும் வலியுறுத்தல்கள்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடிசை மாற்று வாரியம் சார்பாக சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் தரம் குறித்து கடந்த சில நாட்களாக அதிகபடியான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

அதன்படி கட்டடத்தின் சுவர்கள் மற்றும் படிக்கட்டுகளில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்வதும், அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படாமலேயே மக்களை குடியமர்த்தியிருப்பதாக அதிமுக ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கட்டடத்தின் தரம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் சேகர்பாபுவும் நேரடியாக குடியிருப்பு பகுதியில் ஆய்வும் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இன்றைய (ஆக.,19) சட்டமன்ற கூட்டத்தொடரின் போது புளியந்தோப்பு கட்டடத்தின் தரம் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், “தொட்டால் சிணுங்கி செடி தெரியும்; தொட்டாலே உதிரும் சிமென்ட்டை கண்டுபிடித்தவர்கள் கடந்த அ.தி.மு.க ஆட்சியாளர்கள்.

அந்தக் கட்டடத்தை கட்டியது யார் என்று கண்டுபிடித்து அவர்கள் எங்கெங்கெல்லாம் கட்டடம் கட்டி உள்ளனரோ அங்கெல்லாம் கட்டடங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மிகக் குறுகிய காலத்தில் இந்த தரமில்லாத கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அந்த கட்டுமான நிறுவனம் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

தரமற்ற கட்டிடங்களை கட்டிய துறைக்கு அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.” என்றார்.

இந்நிலையில், தொட்டாலே உதிரும் சிமென்ட்டை கண்டுபிடித்த முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழத் தொடங்கியுள்ளன. மேலும் #சிமெண்டா_விபூதியா_பன்னீரு என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் மீது விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலதரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories