தமிழ்நாடு

நொறுங்கும் பி.எஸ்.டி நிறுவன கட்டுமானங்கள்: புளியந்தோப்பை தொடர்ந்து தோண்டத்தோண்ட வெளிவரும் அதிமுக ஊழல்கள்!

அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தரமற்ற முறையில் கட்டுமான பணி நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

நொறுங்கும் பி.எஸ்.டி நிறுவன கட்டுமானங்கள்: புளியந்தோப்பை தொடர்ந்து தோண்டத்தோண்ட வெளிவரும் அதிமுக ஊழல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை புளியந்தோப்பில், அ.தி.மு.க ஆட்சியில் ரூ. 251 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், சிமென்ட் பூச்சுகள் தொட்டாலே பெயர்ந்து விழுந்ததை அடுத்து அங்கு கட்டிடம் பழுது பார்க்கும் பணி தொடங்கி உள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் முறைகேடுகளால் தரமற்ற முறையில் கட்டிடம் கட்டியதால் பொதுமக்கள் குடியேறுவதற்கு முன்னதாகவே கட்டிடம் சேதமடைந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தரமற்ற முறையில் கட்டுமான பணி நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

புளியந்தோப்பில் புகாருக்கு உள்ளாகியுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் கட்டிவரும் பல இடங்களிலும் தரமற்ற முறையில் கட்டுமானப் பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பி.எஸ்.டி கட்டுமான நிறுவனமே திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது. 2020ல் ரூ.385 கோடி மதிப்பில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி பணிக்கு முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினர். இங்கும் தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

முன்னதாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் திரிமங்கலம் - தளவானூர் இடையே தென்பெண்ணை ஆற்றில் பி.எஸ்.டி நிறுவனத்தால் கட்டப்பட்ட தடுப்பணை நான்கே மாதங்களில் கடந்த ஜனவரி மாதமே உடைந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே ஒரத்தூர் - ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியிலும் அடித்தளம் தரமில்லாமல் அமைத்துள்லதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பி.எஸ்.டி நிறுவனம் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தரமற்ற கட்டிடங்களை கட்டிய துறைக்கு அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீதும் வழக்கு தொடர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories