அரசியல்

சி.வி.சண்முகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை : ‘ஐயோ.. அவங்க கோவப்படுவாங்க’- பதறியடித்து அறிக்கை விட்ட ஓ.பி.எஸ்!

கூட்டணியில் சலசலப்பு நிலவிவரும் நிலையில் பா.ஜ.கவுடனான கூட்டணி தொடரும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சி.வி.சண்முகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை : ‘ஐயோ.. அவங்க கோவப்படுவாங்க’- பதறியடித்து அறிக்கை விட்ட ஓ.பி.எஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததுதான் என்ற பேச்சும் தொடர்ச்சியாக முணுமுணுக்கப்பட்டு வந்த நிலையில், அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி சி.வி.சண்முகமே தேர்தல் தோல்விக்கு பா.ஜ.கதான் காரணம் என பேசியிருப்பது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு" என ட்விட்டரில் கே.டி.ராகவன் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதேபோல், பா.ஜ.கவின் எஸ்.ஆர்.சேகர், "சி.வி.சண்முகம் கருத்தை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஏற்கிறார்களா? பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் தொடர்ச்சியாக எதிர்ப்புக் குரல் ஒலித்து வருகிறது. பா.ஜ.க தலைவர்களின் எதிர்ப்பால் பதறிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை" என ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories