அரசியல்

“என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டால்..!” - சைதை துரைசாமிக்கு மா.சுப்பிரமணியன் சவால்!

"மே 2ம் தேதிக்குப் பிறகு சைதை துரைசாமி அரசியலிலிருந்து விலகி விடுவார். அவரை குறுக்கு வழியில் தோற்கடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை" என மா.சுப்பிரமனியன் தெரிவித்தார்.

“என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டால்..!” - சைதை துரைசாமிக்கு மா.சுப்பிரமணியன் சவால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க வேட்பாளர் சைதை துரைசாமி என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என சட்டமன்ற உறுப்பினரும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலை தலைமை தேர்தல் பணிமனையில் சைதாப்பேட்டை தொகுதியின் தி.மு.க வேட்பாளர் மா. சுப்பிரமணியன். பத்திரிகையாளர் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், என்னுடைய நண்பர் ஜம்புலிங்கம் 2 லட்சம் ரூபாய்க்கு தனக்கு வீடு வாங்கி தந்தார் என்றும், 1996 முதல் அந்த வீட்டில் நான் குடியிருக்கிறேன். மேயர் தேர்தலில் நான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளேன், நான் தங்கியிருக்கும் வீட்டு மேற்கூரை மட்டுமே எனக்கு சொந்தம், இடம் சிட்கோவுக்கு சொந்தம் என அதில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

சிட்கோ நிலத்தை நான் அபகரித்து விட்டேன் எனக் கூறி வருகின்றனர். சாதாரண 1,100 சதுர அடி நிலத்தில் குடியிருக்கும் என் மீது சைதை துரைசாமி குற்றம்சாட்டுகிறார். நான் பொய்யான ஆவணங்களை வழங்கி எனது மனைவி பெயரில் நிலம் வாங்கியதாக சைதை துரைசாமி நிரூபித்தால் அரசியலில் இருந்தே நான் விலகி விடுகிறேன்.

“என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டால்..!” - சைதை துரைசாமிக்கு மா.சுப்பிரமணியன் சவால்!

என்மீதான நில அபகரிப்பு வழக்கிற்கு முறையான ஆதாரம் வழங்க முடியவில்லை என்பதால் என் மீது களங்கம் விளைவிக்கப் பார்க்கிறார். மேலும், மே 2ம் தேதிக்கு பிறகு சைதை துரைசாமி அரசியலிலிருந்து விலகி விடுவார். அவரை குறுக்கு வழியில் தோற்கடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. சைதை துரைசாமியுடன் விவாதிக்க நான் தயார்.

இரண்டு நாட்களுக்குள் துரைசாமி இதனை நிரூபிக்க வேண்டும். என் மீதான குற்றச்சாட்டை நீருப்பித்தால் அரசியலை விட்டே விலகத் தயார். அப்படி குற்றச்சாட்டை நிரூப்பிக்கத் தவறினால் சைதை துரைசாமி தேர்தலிலிருந்து விலகத் தயாரா?

2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. சென்னை பெருவெள்ளம் குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பியபோது பதிலளிக்காமல் சென்றவர் சைதை துரைசாமி. அவர் மீது 10-க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன.

சைதை வரலாற்றில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மே 2-ம் தேதிக்கு பிறகு சைதை துரைசாமி மீது உள்ள நில அபகரிப்பு வழக்கை சட்டப்பூர்வமாக கொண்டு செல்வேன். தேர்தலில் தோற்றால் காரணம் கூறுவதற்கு சைதை துரைசாமி என் மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories