தி.மு.க

“உச்சகட்ட தோல்வி பயம்: செய்வதறியாது வருமான வரித்துறையை ஏவிய பாஜக அதிமுக” - பி.வில்சன் சரமாரி தாக்கு!

தேர்தல் நெருங்கி வரும் ஆந்த நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தியது பாஜக -அதிமுக தோல்வி பயத்தால் தான் என திமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.

“உச்சகட்ட தோல்வி பயம்: செய்வதறியாது வருமான வரித்துறையை ஏவிய பாஜக அதிமுக” - பி.வில்சன் சரமாரி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவரின் மகள் வீட்டில் மற்றும் தி.மு.க வேட்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி பாஜக - அதிமுக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்பதை குறித்து இன்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமிடம் புகார் மனுவை திமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “தமிழகத்தில் வருமான வரித்துறையினர் ஒரு மாதத்திற்கு முன்னதாகவோ இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவோ சோதனை நடத்தாமல் தேர்தலுக்கு நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் தி.மு.க நிர்வாகிகளின் வீடுகளில் பாஜக, அதிமுக அரசுகளின் தூண்டுதலின் பெயரில் உள் நோக்கத்தின் அடிப்படையில் சோதனை நடத்துவது கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் வருமான வரித்துறையினர் குறிப்பாக இன்று காலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மட்டுமல்லாமல் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் வீடுகளில், கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இது முற்றிலும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. இந்த வருமான வரி சோதனை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம். மேலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இந்த புகாரை அளித்துள்ளோம்.

பாஜக அதிமுகவினர் மத்திய அரசு கட்டுப்பட்டிலுள்ள இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருமான வரித்துறையினரை அரசியல் உள்நோக்கத்துடன் தவறாக வழி நடத்துகிறது.

வருமான வரித்துறையினர் அரசியல் நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்துவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வரும் நிலையில் மீண்டும் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்

திமுக இந்த வருமான வரி சோதனை பயந்துவிடப் போவதில்லை. தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுகவிற்கு தான் வாக்களிக்கப் போகிறோர்கள். எங்களுடைய தலைவர் கூறுவது போல் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் அதுதான் நடக்கப்போகிறது. இப்போது அதிமுக அரசுக்கு பயம் வந்துவிட்டதாலேயே இந்த சோதனைகளை ஏவிவிட்டிருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories