அரசியல்

வாரிசு அரசியலை பற்றி பேசும் மோடிக்கு 43 MPக்கள் பா.ஜ.க தலைவர்களின் வாரிசுகள் என்பது தெரியாதா?!

வாரிசு அரசியலை பற்றி பேசும் மோடிக்கு, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களில் 43 எம்.பி.க்கள், பா.ஜ.க தலைவர்களின் வாரிசுகள் என்பது தெரியாதா? என பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாரிசு அரசியலை பற்றி பேசும் மோடிக்கு 43 MPக்கள் பா.ஜ.க தலைவர்களின் வாரிசுகள் என்பது தெரியாதா?!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“தந்தி” செய்திகள் தொலைக்காட்சியில், நேற்று முன்தினம் இரவு ஒளிபரப்பான, “ஆயுத எழுத்து” விவாத நிகழ்ச்சியில், கழகத்தின் சார்பில், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கலந்து கொண்டார். அப்போது, அந்நிகழ்ச்சியின் நெறியாளர் ஹரிஹரன், நேற்று முன்தினம் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதம் நடத்தினார்.

அப்போது, “நேற்று முன்தினம் கோவையிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரதமர் மோடி அவர்கள் ஆற்றிய உரை” தொடர்பான விவாதம் எழுந்தது. அது வருமாறு:-

கேள்வி: பிரதமர் நரேந்திர மோடி பாண்டிச்சேரியிலும், கோவையிலும் பேசுகிறபோது தி.மு.க. - காங்கிரசு கூட்டணி, அவர்களின் உட்கட்சி முரண்களில் சிக்கித் தவிப்பதாகச் சொல்கிறாரே! உண்மையா?

பதில்: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அவர்வகிக்கும் பதவிக்கான தரத்திலிருந்து மிகக்குறைந்த தரத்திற்கு இறங்கி வந்து பிரச்சாரத்தைத் துவக்கி இருக்கிறார். பாண்டிச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து, ஒரு ஜனநாயகப் படுகொலையை நடத்தி விட்டு, ஜனநாயகத்தாயின் பச்சை இரத்தம்காய்வதற்கு முன்பாக, அந்த இரத்தத்தை எடுத்து நெற்றியிலே பூசிக் கொண்டு, ஒரு ஜெயவீரனைப்போல் பேசியிருக்கிறார்.

வாரிசு அரசியலை பற்றி பேசும் மோடிக்கு 43 MPக்கள் பா.ஜ.க தலைவர்களின் வாரிசுகள் என்பது தெரியாதா?!

ஜனநாயகப் படுகொலை!

கடந்த நான்கரை ஆண்டுகளாக துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அவர்களை வைத்துக்கொண்டு, முதல்வர் நாராயணசாமி நடைமுறைப்படுத்த முயற்சித்த மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விடாமல் தொடர்ந்து தடங்கல்களை ஏற்படுத்தி, இன்னும் மூன்று மாதங்களே ஆட்சிக் காலம் இருக்கிற நேரத்தில், கிரண்பேடியை மாற்றிவிட்டு, தமிழிசை அவர்களை பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி, நாராயணசாமி அவர்களால் நிறைவேற்றப்பட்ட மூன்று திட்டங்களை, நாராயணசாமி இல்லாமல் பிரதமர் துவக்கி வைத்துப் பேசுவது என்ன நியாயம்?

அதோடு, கோவையிலே பேசுகிற போது தி.மு.க.வை, வாரிசு அரசியல் நடத்துகிறது என்று பேசுகிற மோடி அவர்களுக்கு; நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி.க்களில் ஜோதிராதித்ய சிந்தியா முதல், அணு ராக்தாகூர் வரை 43 எம்.பி.க்கள் - பா.ஜ.க. தலைவர்களின் வாரிசுகளாக நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது தெரியாதா?

தி.மு.க.வை ஊழல்கட்சி என்று சொல்கிற பிரதமர் அவர்களே, இதுவரையில் தி.மு.க தொண்டன் ஒருவன் கூட ஊழலுக்காகத் தண்டனை பெற்ற வரலாறு கிடையாது. இந்தியாவில் முதன் முதலில், “லோக் ஆயுக்தா” மூலம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று பதவி இழந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பது தெரியாதா!?

நாட்டிலேயே ஒரு தேசியக் கட்சியின் தலைவர் ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டு, திஹார் சிறைக்குச் சென்று இறந்தே போனவர் பங்காரு லட்சுமண், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் என்பது மோடிக்கு மறந்துவிட்டதா?

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கின் 574 பக்கத் தீர்ப்பில் 40 பக்கம், ஜெயலலிதா குற்றவாளிஎன்று தீர்ப்பளித்து, ஊழல்வாதி என்று சொன்னதே, அது தெரியாதா?

தி.மு.க ஆட்சியிலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்று, இன்று, பொள்ளாச்சிக்குப் பக்கத்தில், கோவையில் பேசுகிறாரே!

பெண்களின் ஓலம் கேட்கவில்லையா மோடிக்கு? பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 200 பெண் பிள்ளைகளின் அலறலும், அந்தக் குழந்தைகளின் தாய்மார்களின் ஓலமும் மோடிக்குக் கேட்கவில்லையா?

தி.மு.க.காரர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்பது போலப் பேசுகிறாரே! இது ஒரு பிரதமர் பேசுகிற பேச்சா? கழகத்தின் தொண்டர்களை, எங்கள் உடன்பிறப்புகளை சமூக விரோதிகள் என்று பிரதமர் சொல்கிறபோது எனக்குக் கோபமும், ஆத்திரமும் வருகிறது. ஆனாலும், அவர் பிரதமர் என்கிற காரணத்தினால் அதையெல்லாம் அடக்கிக்கொண்டு, கண்ணியத்தோடும், மரியாதையோடும் பேசிக் கொண்டிருக்கிறேன். பிரதமருக்கு அந்தத்தராதரம் தெரிய வேண்டாமா!?

modi
modi
google

கேள்வி: 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களை ஆல் பாஸ் கொடுத்துள்ளார்களே! 59 வயதிலிருந்து அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு? தி.மு.க.வின் பார்வை.

பதில்: ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக அறிவித்திருப்பது, கிராமப்புறத்திலே உள்ள பழமொழி “வருமானத்திற்கு வக்கில்லாதவன் 30 வயது ஆனாலும் கல்யாணத்தை ஒத்திவைப்பான்’’ என்று சொல்வதைப்போல, கடந்த ஆண்டே 59 வயதாக உயர்த்தி அறிவித்தபோது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன்றைய மாநில செயலாளர் நம்பிராஜன், அவர்கள் தலைமையில் டி.பி.ஐ வளாகத்தில் கூடி வயது உயர்வு வேண்டாம் என்று சொன்னார்கள். அவர்கள் கேட்டதெல்லாம் 10 அம்சக் கோரிக்கைகள் குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் கேட்டார்கள் கொடுத்தீர்களா? 4.5 லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று கேட்டார்கள் செய்தீர்களா?

8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்திய போது 21 மாதநிலுவைத் தொகை வேண்டுமென்று கேட்டார்களே கொடுத்தீர்களா? பாழாய்ப்போன 10 ஆண்டுகள் அதோடு, தமிழகத்தில் மதிப்பூதியத்திலும், தொகுப்பூதியத்திலும் கொத்தடிமைகளைப் போல் வேலைபார்க்கிற தற்காலிக ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வேண்டும் என்று சொன்னார்களே செய்தீர்களா? அ.தி.மு.க அரசின் பாழாய்ப்போன 10 ஆண்டுகளாக 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினார்களே, கருணையோடு அந்த மனுக்களை பரிசீலித்தீர்களா?

அவர்கள் யாரும் கேட்காதவயது வரம்பை உயர்த்தி இருக்கிறார்களே என்ன நியாயம். இளைஞர்கள் ஒத்துக்கொள்வார்களா? இன்னும் ஒன்று சொல்கிறேன். ஹரி சார், என்மனம் வெறுத்துப் போய்சொல்கிறேன். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 20 வயது முதல் 45வயது வரையிலான 89 லட்சம் இளைஞர்கள் காத்துக் கிடக்கிறார்களே எந்த வேலையும் இல்லாமல், வீட்டிலே தண்டச்சோறு என்று திட்டுவதையும் தாங்கிக் கொண்டு ஏதேனும் வேலை கிடைக்காதா? என்று ஏங்கிநிற்கும் வேளையில் இதுதேவை தானா?

வாரிசு அரசியலை பற்றி பேசும் மோடிக்கு 43 MPக்கள் பா.ஜ.க தலைவர்களின் வாரிசுகள் என்பது தெரியாதா?!

இளைஞர்கள் இதை ஒத்துக்கொள்வார்களா? ஏற்கனவே 4.5 லட்சம் காலிப் பணியிடங்கள் அதோடு ஒரு வேளை நீங்கள் உள்ளபடியே அரசு ஊழியர்கள் மீதான நல்லெண்ணத்தில் செய்வதாக இருந்தால் கடந்த ஆண்டு 59 வயது என்றுஅறிவித்த போதே 60 வயது என அறிவித்திருக்க வேண்டியது தானே? யார் தடுத்தது. 10 ஆயிரம் கோடி ரூபாய் அவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழகத்தின் கஜானா காலியாக இருக்கிறது. அவர்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை.

எனவே அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 60 ஆக்கியிருக்கிறார்கள். இன்னும் சொல்கிறேன், 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்று அறிவித்து இருக்கிறார்கள். இந்த 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுமுறை யார் கொண்டுவந்தது. இதே அ.தி.மு.க அரசு தானே! கொண்டுவரும்போது நாங்கள் கூட மூன்று வருடம் தொடர்ந்து தேர்வு என்றால் மாணவர்கள் தேர்வைக்கண்டு பயந்து கல்வியை விட்டுப்போய் விடுவார்கள் என்றுசொன்னோம்.

அ.தி.மு.க அமைச்சர் என்ன சொன்னார். 12 ஆம் வகுப்பு தேர்வுமுடிந்து மாணவர்கள்pro-fessional course சேர்வதற்கு நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டி இருக்கும். அதற்கு 11ஆம் வகுப்பு தேர்வு கட்டாயம் என்கிறீர்கள் இப்போது ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்டுதான் பள்ளிகளை திறந்தீர்கள், தேர்வு நடத்துவதற்கு என்ன தடங்கல்? 12 லட்சம் பேர் தேர்வு எழுதும் போது, 9,10,11க்கு தேர்வு நடத்த முடியாதா?

கேள்வி: நீங்கள்தானே வகுப்பு வைக்கக்கூடாது, தேர்வு நடத்தக்கூடாது என்று சொன்னீர்கள்?

பதில்: ஆம் கொரோனாகாலத்தில் வேண்டாமென்று சொன்னோம். நவம்பர் மாதத்தில் மழைக்காலம் என்பதால் வேண்டாம் ஜனவரியில் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னோம். அப்படியே தானே வைத்தீர்கள். பாடத்தைவேறு குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்தீர்கள். நடத்திய பாடத்தில் தேர்வு வைக்க வேண்டியது தானே. 11 ஆம் வகுப்பு இல்லை என்றாலும், 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தலாமே. அது முடிந்தவுடன் தானே எந்த குரூப் எடுப்பது என்று மாணவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

இப்போது மார்க் எப்படி வழங்குவீர்கள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மார்க் வைத்து வழங்கினால் அது எப்படி சரியாகும். பொதுவாகவே மாணவர்கள் நான்படிக்கிற காலத்திலே கூட காலாண்டு, அரையண்டில் குறைவான மார்க் வாங்கினாலும் முழு வருடத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவோம். சரி தேர்வு இல்லை, ஆல் பாஸ் என்று அறிவித்து விட்டீர்கள். குழந்தையாவது பள்ளிக்குச் செல்லுமா?

வாரிசு அரசியலை பற்றி பேசும் மோடிக்கு 43 MPக்கள் பா.ஜ.க தலைவர்களின் வாரிசுகள் என்பது தெரியாதா?!

அரசியல் பேராண்மை மிக்க தலைவர் கலைஞர்

கேள்வி : பள்ளிக்கு வரவேண்டுமென்று சொல்லி விட்டார்கள் சார்.

பதில் : அதெப்படி, என்வீட்டில் ஒரு குழந்தை இருந்து அதைப் பள்ளிக்குச் செல் என்று சொன்னால், அதுதான் பாஸ் என்று சொல்லிவிட்டார்களே. மறுபடியும் ஏன் பள்ளிக்கு என்று கேட்கடார்களா? இதென்ன அறிவிப்பு என்று தொடர்ந்து வாதம் சென்ற போது பெருந்தலைவர் காமராஜர், காங்கிரஸ் குறித்த விவாதம் திரும்பியபோது, நெருக்கடி நிலையில் அதை எதிர்த்து ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்த அரசியல் பேராண்மைமிக்க தலைவர் கலைஞர் என்பதை பா.ஜ.க. நண்பர் ஒத்துக் கொண்டமைக்கு நன்றி.

அதோடு 1966 நவம்பர் 7 ஆம் தேதி அன்று பசுப் பாதுகாப்பு இந்து மகா சார்ந்த 1.25 லட்சம் பேர் டெல்லியில் கூடியதும் காமராஜர் மீது கொலை வெறித் தாக்குதல் நடந்தது உண்மை என்றும் 2016 நவம்பர் 07ந் தேதி வந்த “திகேரவன்” பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதோடு இன்று பேசிய பிரதமர் மனதளவில் வருந்தும் வகையில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக ஆட்சி அமைந்து மக்களுக்கு நல்லாட்சி கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories