அரசியல்

அரசின் கடன் சுமையை உயர்த்தியதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? - எடப்பாடி - ஓபிஎஸ்-ஐ சாடிய துரைமுருகன்!

தமிழகத்தை ஆட்சி செய்ய அதிமுகவுக்கு அருகதையே இல்லை என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சாடியுள்ளார்.

அரசின் கடன் சுமையை உயர்த்தியதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? - எடப்பாடி - ஓபிஎஸ்-ஐ சாடிய துரைமுருகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்து இறங்கும்போது ஒரு லட்சம் கோடியாக தமிழகத்தின் கடன் இருந்தது. இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கும் போதே 5.7 லட்சம் கோடி கடன் என்று சொல்வது இந்த ஆட்சியாளர்களின் நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன்,

“டெண்டர்களை தனது உறவினர்களுக்கு விட்டு வருமானத்தை ஈட்டுவதே எடப்பாடி பழனிச்சாமியின் நிர்வாகம். விளம்பர மோகத்தால் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார் எடப்பாடி. கடந்த மூன்று மாதங்களில் 40 க்கும் மேற்பட்ட டெண்டர்களை விட்டு அரசு கஜானாவை காலி செய்து உள்ளார்.

பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் அதிமுக ஆட்சிக்கு அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளனர். அரசின் கடன் சுமையை உயர்த்தியதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? தமிழகத்தை ஆட்சி செய்ய அதிமுகவுக்கு அருகதை இல்லை

தமிழக மக்களின் ஆதரவுடன் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிதி மேலாண்மையை சீர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திமுக தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவோம். ஆகவே நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் திமுக புறக்கணிக்கிறோம் என திமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories