அரசியல்

பஃபூன் வேடத்துக்கே லாயக்கில்லாதவர்களுக்கு பட்டத்து ராஜா வேடமா? - பழனிசாமியை சரமாரியாக தாக்கிய VP கலைராஜன்

தமிழகத்தைச் சீரமைத்து லஞ்ச ஊழலின் பிடியிலிருந்து மீட்டுமக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்கிற லட்சியம்தான் எங்கள் தலைவரிடம் உள்ளது. அந்த லட்சியத்தை நோக்கி அவர் பயணம் தொடர்கிறது.  

பஃபூன் வேடத்துக்கே லாயக்கில்லாதவர்களுக்கு பட்டத்து ராஜா வேடமா? - பழனிசாமியை சரமாரியாக தாக்கிய VP கலைராஜன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘சொக்கட்டான் ஆடுவோமா’ என்றாலே தொடைநடுங்கி ஓடும் கூட்டத்தின் தலைவராக விளங்கும் முதலமைச்சர் பழனிச்சாமி, ‘ஊழலைப் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?’என்று வாய்ச்சவடால் விட்டுள்ளார். யாரைப் பார்த்து? நாளைய தேர்தலில் மக்கள் வாக்குகளால் வாகை சூடி முதல்வராகி தமிழ்நாடாளப் போகிற நல்மனம் கொண்ட நன்முகம் பெற்ற எங்கள் தலைவரைப் பார்த்துத்தான்! டெண்டரில் ஊழல் நடந்துள்ளது விசாரிக்க வேண்டுமென கேட்டதற்கு, ‘உயர் நீதிமன்றம் ஊழல் நடந்திருப்பதற்கு முகாந்திரம் இருக்கிறது. சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டவுடன் உச்ச நீதிமன்றத்திற்கு பின்னங்கால் பிடறியில் பட ஓட்டமெடுத்து தடை வாங்கி தற்காலிகமாக தன் தலையை காப்பாற்றிக் கொண்ட இந்த பழனிசாமி என்ற யோக்கியவான்தான் உதார் விட்டுள்ளார்.

உறுமி மிரட்டிப்பார்த்துள்ளார். இந்த வீராதிவீரர் எய்திடும் காகிதக் கணைகளை கண்டு கலங்கிப்போய் நிற்கிற கழகமல்ல தி.மு.க-வும் அதன் தலைவரும். வீறு கொண்டு விட்டால் எதிரியை வீழ்த்தித்தான் அவருக்கு பழக்கம். வீணர்கள் விரண்டோடியது தான் கடந்த கால வரலாறு. சண்டியர் வேஷம் போட்டு காட்டுகிறார் இந்த பழனிசாமி என்ற சண்டிக்குதிரை! பழனிசாமிக்கு பதில் தர எங்கள் தலைவர் தேவையில்லை, கழகத்தின் அடிப்படை உறுப்பினர் கண்ணியம் காத்திடும் கடைசித் தொண்டனே போதும்! தளபதி கூட்டம், சண்டமாருதம் செய்திட தயங்காத கூட்டமாகும். எப்படியாவது எங்கள் தலைவரை சீண்டினால் அதன் மூலம் தனக்கு விளம்பரம் கிடைக்காதா என்றுதான் பழனிசாமி எதிர்பார்க்கிறார். அம்மையார் மறைவிற்குப் பின்னால் கூவத்தூரில் நடந்த வியாபார யுத்தத்தில் விலைகளை அதிகம் கொடுத்து சசிகலாவால் முதல்வர் பதவியில் அமர்ந்துகொண்ட வெல்லமண்டி வியாபாரி மற்றும் தரகரானபழனிசாமி சசிகலாவிற்கு நன்றியாக இருந்தாரா? தற்போது சொல்கிறார், ஆண்டவனால் முதல்வராக்கப்பட்டாராம்!

சசிகலா காலைத் தேடி மண்டியிட்டு ஊர்ந்து மண்புழுவைப் போல தரையை தடவித் தடவி சென்று முழங்காலிட்டு முதல்வர் பதவியைப் பெற்ற காட்சியை தொலைக்காட்சிகளெல்லாம் வெளியிட்டதைப் பார்த்த மக்களெல்லாம் உயிரோடு இருக்கும்போதே உண்மையை குழித் தோண்டிப் புதைக்கப் பார்க்கிறவருக்கு சவால் விட என்ன யோக்கியதை இருக்கிறது? அடித்த காற்றிலே கோபுரத்தில் ஒட்டிக் கொண்ட குப்பை கோபுரத்தில் மின்னிக்கொண்டிருக்கும் கம்பீரமான கலசத்தைப் பார்த்து சவால் விட்டதாம். அதுபோல்தான் அ.தி.மு.க.வினர் சவால் விடுத்துள்ளனர். அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததையே படிக்க முடியாது பல்லிளித்து பவுசு காட்டும் பழனிசாமி எங்கள் தலைவரோடு நேருக்கு நேர் விவாதிக்கத் தயாராம். களத்திற்கு ஒரு வேளை விவாதம் புரிவோம் வருகிறீரா என்று அழைத்தால் விவாதமா வேண்டவே வேண்டாம்; விட்டாலே போதும் என்று விரண்டோடும் வேலையைத்தான் பழனிசாமி செய்வார். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பார்கள், அதைபோல் எங்கள் தலைவர் தங்கத்திற்கு சவால் விடுகிறார் ஒரு தகரம். தங்கமும் தகரமும் ஒன்றாகுமா? சவால் விடுகிற சண்டியர் பழனிசாமி மேடையில் விவாதிக்க வருவது இருக்கட்டும், முதலில் தனது அதிகாரிகள் எழுதித்தரும் பேச்சுக்களையாவது ஒழுங்காக படிக்கக் கற்றுக் கொள்ளட்டும்.

பஃபூன் வேடத்துக்கே லாயக்கில்லாதவர்களுக்கு பட்டத்து ராஜா வேடமா? - பழனிசாமியை சரமாரியாக தாக்கிய VP கலைராஜன்

உதாரணத்திற்கு ஒரே ஒரு கூட்டம் அதுவும் புத்தகக் கண்காட்சியை துவங்கிடும் விழாவில் பேசிய பேச்சு அய்யகோ அவமானம்! அவமானம்!!! பழனிசாமி பேச்சின் போது, உதிர்த்த முத்துக்களை கேளுங்களேன். போராளி ஆப்ரகாம் லிங்கன் பெயரை உச்சரிக்க முடியாமல் அறிவாளி எடப்பாடி ஆப்! ஆப்! ஆப்! என்று புலம்பி ஆப்ரகாம் லிங்கன் பெயருக்கு ஆப்பு அடித்துள்ளார். பாபா சாகிப் அம்பேத்கர் என்பதை சொல்ல முடியாமல் பாபா பாபர், பாபா என்று உளறிக்கொட்ட - பின்னால் நின்ற அதிகாரி கூற, பிறகு அம்பேத்கர் என்று கூறியுள்ளார். வேதனை என்னவென்றால் திராவிட இயக்கத்திற்கு வித்திட்ட தந்தை பெரியார் பெயரைக் கூட உச்சரிக்க முடியாமல் தத்த பெரியார் என்று உளறியுள்ளார். ஆல்பிரட் ஐன்ஸ்டீன் என்ற பெயரைக் கூட ஆல்பட் ஆல்பட் என்று கூறி தனது அறியாமையால் விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு ஆம்ப்லேட் போட்டுக் கொடுத்துள்ளார். காந்தி அதிகம் எமர்சன் புத்தகத்தையே விரும்பிப்படிப்பாராம் என்று கூறிவிட்டு காந்தி அதிகம் படித்தப் புத்தகத்தின் பெயரை உச்சரிக்க முடியாமல் புரியாத மொழியில் ஏதோ உளறிக் கொட்டினார்.

படிக்க முடிய, முடியாத, முடிய, முடியுமா, என்று என்ன சொல்ல வந்தாரோ முடிக்கவே முடியாமல் முனகி முணுமுணுத்தார். இப்படி ஒரு கூட்டத்தில் மட்டும் அதுவும் அறிவாளர்கள் அதிகம் வரும் புத்தகக் கண்காட்சியில் புலம்பியும் உளறியும், சாதாரண பழனிசாமி அல்ல, தமிழக முதல்வர் பழனிசாமி தமிழகத்திற்கே இழிவைச் சேர்த்தார். அது மட்டுமல்ல! ஏற்கனவே சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என்று பேசி கம்பனையும் சேக்கிழாரையும் அசிங்கப்படுத்தினார். உங்கள் ஓய்வுநேர பொழுதுபோக்கு என்னவென்று ஒரு நிருபர் கேட்க, அதிகம் புத்தகம் படிப்பதாக பழனிசாமி கூற,‘கடைசியாக படித்த புத்தகம் எது?’என்று நிருபர் கேட்க,‘அதுவா, அது அதுவா அது’ என்று 3 நிமிடங்கள் முழித்து விழிபிதுங்கி வியர்த்துப்போய், ‘அது வீட்டில் உள்ளது புத்தகம் பெயர் ஞாபகம் இல்லை’என்று தனது அளப்பரிய அறிவாற்றலை வெளிப்படுத்தினார். கோடியிலே குப்புறப்படுத்து ஆசை தீர புரண்டு மகிழும் பழனிசாமி, பொங்கலுக்கு வழங்கப்படும் 2500 ரூபாய் என்பதை 25,000 கோடி என்று பேசினார். இப்படி எத்தனை எத்தனையோ! தமிழகத்தின் சாபக்கேடு என்று மக்கள் அன்றாடம் தலையில் அடித்துக் கொள்வது பழனிசாமிக்கு எங்கே தெரியப்போகிறது? அண்ணா, கலைஞர், காமராஜர், ராஜாஜி அமர்ந்திருந்த நாற்காலிக்கு பழனிசாமி எவ்வளவு இழிவு சேர்த்துள்ளார் பார்த்தீரா! சவால் விடுவதற்கும் தகுதி வேண்டும். மிசா கொடுமையைப் பார்த்து, கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி ஒரு நாளா! ஒரு வாரமா!

ஒரு மாதமா! அல்ல அல்ல - ஒரு வருடம் சிறைக் கொட்டடியில்கொலை வெறித்தனத் தாக்குதலை சந்தித்து ரணமாகி போன உடலைக் கொண்ட எங்கள் தலைவரைப் பார்த்துத் தான் சவால் விட்டுள்ளார், இவர் நீங்கள் 1996-க்குப் பிறகு அம்மையார் சிறை பிடிக்கப்பட்டபோது சிறை சென்றீரா? அரசியல் ரீதியாக எத்தனை முறை சிறை சென்றிருக்கிறீர்கள் கூறமுடியுமா? சிறைக்குள் ஏற்பட்ட ரணத்தைக் காட்டமுடியுமா? சவால் விடுகிறாராம் சவால்! பொள்ளாச்சியில் அப்பாவிப் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கிச் சீரழித்த கும்பலை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனைக்கு ஆளாக்கப்படவேண்டும் என்று மகளிர் நலனில் அக்கறை கொண்ட எங்கள் தலைவர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகக் கோரி வந்தார்.

இன்றைக்கு வீரம்பேசும் பொள்ளாச்சி ஜெயராமனும், வேலுமணியும் நடவடிக்கை எடுத்திட முயன்றார்களா? குற்றவாளிதானென தெரிந்தவுடன் கண்ணகியின் பார்வையைச் சந்திக்க முடியாத பாண்டிய மன்னன் சிம்மாசனத்திலிருந்து கீழே விழுந்து உயிர் நீத்தான், அவன் மனைவியும் அப்போதே உயிர் விட்டாள். இந்த ஒரு சான்று போதும் மானமுள்ள தமிழனுக்கு! சி.பி.ஐ விசாரித்து குற்றவாளிகளாக அடையாளம் காட்டியவரோடு கலந்துபேசி கைகோர்த்து கொஞ்சிகுலாவி வந்த வேலுமணியும், ஜெயராமனும் இன்றைக்கு உண்மை வெளிவந்து 5 பேர் கைது செய்யப்பட்டவுடன் கதறுகிறார்களே ஏன்? பட்டவர்த்தனமாக அ.தி.மு.க.வினர் என்று அறிவித்த பின்பு நடவடிக்கை எடுக்கிறார்களாம். இதனைக் கண்டிக்க கழக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.போன போது குற்றமில்லாத இந்த யோக்கிய சிகாமணிகள் அவரைத்தடுத்து நிறுத்தியது ஏன்? இதெல்லாம் ஒரு பிழைப்பா? பொள்ளாச்சியில் நபருக்கு 500 ரூபாய் கொடுத்து மக்களைக் கொண்டு ஒரு கூட்டத்தை கூட்டினார்கள்.

இயற்கை சும்மா இருக்குமா? மழை வந்து கூட்டத்தைகலைத்துவிட்டது. காலி மைதானத்தைப் பார்த்து கத்தியுள்ளனர், ஜெயராமன் எங்கள் தலைவரைப் பார்த்து,‘நீ தமிழனா’ என்று கேட்டு ஒருமையில் பேசியுள்ளார்.எங்கே தன் மகன் குற்றவாளியென அடையாளப்படுத்தப்படுவானோ என்ற பயத்தின் உச்சத்திற்கேசென்று கதறியுள்ளார். நீங்கள் உங்கள் வீட்டிற்குள்என்ன மொழியில் பேசுவீர்கள் என்பதை கூறிவிட்டுபொள்ளாச்சி ஜெயராமனே யார் தமிழன் என்பதை பிறகுகேளுங்கள். இந்த ஜெயராமனின் தந்தையுடைய நண்பர்குழந்தை வேலு கலைஞரிடம் சட்டசபையில் சவால்விட்டு பிறகு சரண்டர் ஆகி முகம்தொங்கிப் போனகதையெல்லாம் மறந்து விட்டாரா? வசனம் பேசும் போதுவார்த்தைகளை பார்த்துப் பேசுங்கள்.உயர்ந்த எண்ணமுடையவர்கள் கருத்துக்களைபரிமாறிக் கொள்வர்.

சராசரி மனிதர்கள் நிகழ்வுகளைவிவாதிப்பார்கள். குறுகிய மனம் கொண்டவர்கள் திட்டிப்பேசிக்கொண்டு இருப்பார்கள் என்று கிரேக்க தத்துவமேதை சாக்ரடீஸ் கூறியுள்ளார். இந்த மூன்றாம் தரப்பேச்சாளர்களுக்கு இது புரிந்திருக்க வேண்டும்.வாயாடாதீர்கள்! உங்கள் வாயிலிருந்து ஒழுகும் எச்சில்வழுக்கி விழுந்து பல்லுடைத்துக் கொள்ளாதீர்கள்.நாம் அடைய வேண்டிய லட்சியம் எப்போதும் நமக்குமுன்னால் இருக்க வேண்டும், அப்போதுதான்வாழ்க்கை சுவையாக இருக்கும் என்று கூறியுள்ளார்அறிஞர் பெர்னாட்ஷா. அதைப் போல தமிழகத்தைச்சீரமைத்து லஞ்ச ஊழலின் பிடியிலிருந்து மீட்டுமக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்கிற லட்சியம்தான் எங்கள் தலைவரிடம் உள்ளது. அந்த லட்சியத்தைநோக்கி அவர் பயணம் தொடர்கிறது.

இந்த இடைச்செருகல்களின் கதறலையெல்லாம் எதையும் தாங்கும்இதயம் கொண்ட எங்கள் தலைவரைக் காயப்படுத்திடமுடியாது.எங்கள் தலைவர் மட்டும் தான் இன்றைய அரசியலில்மக்களின் வாக்குகளை கவர்ந்திழுக்கும் மகத்தானதலைவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவரின்பயணத்தினை பழனிசாமி போன்ற அரசியல் பதர்களால்தடுத்து நிறுத்த முடியாது. எம் தலைவரோ விதை நெல்போன்றவர். மக்கள் உங்களை விரட்டத் தயாராகிவிட்டார்கள். நீங்கள் இப்போது செய்யும் செயல்களுக்கெல்லாம் மக்கள் முன் நின்று கட்டாயமாக பதிலளித்தேதீரவேண்டும்.பபூன் வேஷம் போடவே லாயக்கில்லாதவர்களுக்குபட்டத்து ராஜா வேடம் போட்டு அமரச் செய்தால் என்னநடக்கும்? நாடு பற்றி எரியும் போது பிடில் வாசித்துரசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னன் கதை தான்நாட்டில் நடக்கும். புரியாதவர்கள் புரிந்து கொள்ளட்டும்,பிறகு ஆளுமையைப் பற்றிப் பேசுவோம்.

banner

Related Stories

Related Stories