அரசியல்

“ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை” : கொந்தளித்த விருதுநகர் தி.மு.க!

ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை என முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை” : கொந்தளித்த விருதுநகர் தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைப் பேச்சுகள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்ளும் ஒரு விளம்பரப் பிரியர். என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் கூட பல நேரங்களில் உளறிக்கொட்டி நெகட்டிவ் பப்ளிசிட்டியை தேடிக்கொள்பவர்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அ.தி.மு.க-வின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயர் கூட அ.தி.மு.க தொண்டர்களுக்கே தெரியாது. அந்தளவிற்கு அடங்கிக் கிடந்தவர் இன்று அவரது மோடி டாடி-யின் மீதுள்ள நம்பிக்கையால், நாக்கால் கம்பு சுற்றும் வேலையை செய்துவருகிறார்.

குறிப்பாக ஊழலில் இருந்து தப்பிக்க பா.ஜ.கவிடம் சரணகதியடைந்த அ.தி.மு.க, சமீப காலமாக திராவிட அரசியலை மறந்து, இந்துத்வா அரசியலை கையில் எடுத்துள்ளது. மற்ற அமைச்சர்களுக்கு ஒருபடி மேலே சென்று இஸ்லாமியர் வெறுப்பு பேச்சு மற்றும் தோற்றத்தில் இந்துத்வா சாமியார்போல் தன்னைக் காட்டிக்கொள்வார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

“ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை” : கொந்தளித்த விருதுநகர் தி.மு.க!

கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடமும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டி.ஜி.பி-யிடமும் தி.மு.க சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம், இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஆனால் இதுவரை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காததான் விளைவு, தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியும், தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பற்றியும் அவதூறாக பேசியுள்ளார். தனது பெறுப்பை உணர்ந்து பேசாத அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் போக்கைக் கண்டித்து விருதுநகரில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை” : கொந்தளித்த விருதுநகர் தி.மு.க!

விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.கவினர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விருதுநகரில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் போலிஸாரால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து போலிஸார் தி.மு.க-வினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அதேபோல் ராஜபாளையம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் ‌ராஜேந்திர பாலாஜி உருவபொம்மையை எரிக்க முயன்றபோது போலிஸாருக்கும் தி.மு.கவினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அங்கு கூடியிருந்த தி.மு.கவினரை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் வந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் அவர்களையும் போலிஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

“ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை” : கொந்தளித்த விருதுநகர் தி.மு.க!

விருதுநகர் மாவட்டம் முழுவதும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து தி.மு.கவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தி.மு.கவினரை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருவதால் பல இடங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், “ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுதான் கடைசி எச்சரிக்கை” என முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகரில் ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரிக்க முயன்று கைதான தி.மு.கவினரை அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “விருதுநகர் அரசியல் கோமாளி, தரங்கெட்ட அரசியல்வாதி, அமைச்சர் பதவிக்கே லாயக்கற்றவர், ஒரு சராசரி மனிதன் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பது கூட தெரியாதவர். விருதுநகர் மாவட்டத்தில் பொது மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு நபராகவும் இருப்பவர் ராஜேந்திரபாலாஜி.

“ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை” : கொந்தளித்த விருதுநகர் தி.மு.க!

அவர் நேற்றைய தினம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தரம் தாழ்த்தி பேசியதோடு ஒருமையிலும் பேசியிருக்கிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக எடுத்துக்கூறினார். அதேபோல் ஜெயலலிதாவின் ஊழலையும் பட்டியலிட்டுக் காட்டினார்.

அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாமல் இந்த தரங்கெட்ட விமர்சனங்களை நேற்று கூறினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்த விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால் இன்று விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க இயக்க நண்பர்களும் பொதுமக்களும் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.

ராஜேந்திரபாலாஜி தன்னை திருத்திக் கொள்ளவில்லை என்றால் அவர் திருத்தப்படுவார். அவர் நாக்கு இதோடு இவ்வாறான பேச்சை நிறுத்தவில்லை என்றால் அந்த நாக்கை எப்படி அடக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தி.மு.க தொண்டர்களுக்கும் தெரியும். நாக்கை அடக்கிக் கொள்ளுங்கள்; இதுவே கடைசி எச்சரிக்கை” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories