அரசியல்

இலங்கை மற்றொரு நேபாளமாகலாம் - சேது சமுத்திர கால்வாயே நம்மை பாதுகாக்கும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

இந்திய பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் தொடங்கி, முழுமையாக முடிக்க வேண்டும் என பாராளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், " கடந்த 10 ஆண்டுகளில் சீனா இலைங்கையில் 7048 மில்லியன் டாலர்களுக்கு முதலீடு செய்துள்ளது. துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி செய்துள்ளது. இத்திடங்களுக்கான கடனை செலுத்த முடியாததால், இலங்கையின் முக்கிய துறைமுகமான ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தியுள்ளது. இலங்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது சீனா. பாதுகாப்பு ரீதியில் பார்த்தால், இலங்கை மற்றொரு நேபாளமாக மாறக் கூடும் அச்சம் உள்ளது.

இலங்கை மற்றொரு நேபாளமாகலாம் - சேது சமுத்திர கால்வாயே நம்மை பாதுகாக்கும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

சீனா இலங்கை மூலம் இந்திய பெருங்கடலில் தனது ஆளுகையை செலுத்த முயற்சிக்கும். எனவே 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கிடப்பில் உள்ள சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்கி நிறைவேற்ற வேண்டும். அதுவே இந்திய பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

இலங்கை மற்றொரு நேபாளமாகலாம் - சேது சமுத்திர கால்வாயே நம்மை பாதுகாக்கும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

ராமர் பாலம் என்கிற ஆடம் பாலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று, வல்லுனர்கள் அறிக்கை தெளிவாக கூறியுள்ளது. 2005-ம் ஆண்டு இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பா.ஜ.க தலைவர் வாஜ்பாய் பங்கேற்று, திட்டத்தை பாராட்டினார். எனவே இதர காரணங்களை தள்ளி வைத்து விட்டு, நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை மனதில் வைத்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்." என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories