அரசியல்

“மு.க.ஸ்டாலினிடம் மிசா ஆதாரம் கேட்பது சீதையை ராமன் தீயில் இறங்கச் சொன்னதற்கு ஒப்பானது” - நீதிபதி சந்துரு

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மிசா கைது குறித்து ஆதாரம் கேட்பது, சீதையை ராமன் தீயில் இறங்கச் சொன்னது போல இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நீதிபதி கே.சந்துரு.

“மு.க.ஸ்டாலினிடம் மிசா ஆதாரம் கேட்பது சீதையை ராமன் தீயில் இறங்கச் சொன்னதற்கு ஒப்பானது” - நீதிபதி சந்துரு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காகத்தான் மிசா சட்டத்தில் சிறை வைக்கப்பட்டார் என முன்னாள் நீதிபதி கே.சந்துரு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவில்லை என, தரங்கெட்ட வகையில் சர்ச்சையைக் கிளப்பினார் அ.தி.மு.க அமைச்சர் மாபா பாண்டியராஜன். இதையடுத்து, தி.மு.க-வின் தியாக வரலாற்றையும், தலைவர் மு.க.ஸ்டாலினையும் அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் பாண்டியராஜனை கண்டித்து தி.மு.கவினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடும்படி தி.மு.க நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். மேலும், “சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தி.மு.கவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.” எனக் குற்றம்சாட்டினார்.

“மு.க.ஸ்டாலினிடம் மிசா ஆதாரம் கேட்பது சீதையை ராமன் தீயில் இறங்கச் சொன்னதற்கு ஒப்பானது” - நீதிபதி சந்துரு

மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் சிறையில் இருந்தது குறித்து, அன்றைய அரசியல் அறிந்த பலரும் கருத்துகளை முன்வைத்துள்ளனர், மு.க.ஸ்டாலின் கைது தொடர்பான பாண்டியராஜனின் கருத்து குறித்து, இஸ்மாயில் கமிஷன் விசாரணையில் ஆஜரான மேனாள் நீதியரசர் கே.சந்துரு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில்ர், “மிசா சட்டத்தில் கைது செய்யப்படுவதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன் போன்றவர்களால் உள்நாட்டுக்கு என்ன பாதிப்பு வந்துவிடும்?

ஷா கமிஷன், சட்டவிரோதமாக அரசியல் பழிவாங்கலுக்காகத்தான் சிறையில் அடைக்கப்பட்டனர் எனக் கூறுகிறது. இஸ்மாயில் கமிஷன், தி.மு.கவை அச்சுறுத்தவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

“மு.க.ஸ்டாலினிடம் மிசா ஆதாரம் கேட்பது சீதையை ராமன் தீயில் இறங்கச் சொன்னதற்கு ஒப்பானது” - நீதிபதி சந்துரு

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் அரசியல் காரணங்களுக்காகத்தான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதை மறுப்பவர்கள்தான் அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். 45 ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்டவர், தடுப்பு காவல் உத்தரவை கையில் வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

நீதித்துறையைப் பொறுத்தவரை குற்றம்சாட்டுபவர்தான் ஆதாரத்தைக் கொடுத்து குற்றத்தை நிரூபிக்கவேண்டும். மு.க.ஸ்டாலின் ஆதாரம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. இது, சீதையை ராமன் தீயில் இறங்கச் சொன்னது போல இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார் நீதிபதி கே.சந்துரு.

“மு.க.ஸ்டாலினிடம் மிசா ஆதாரம் கேட்பது சீதையை ராமன் தீயில் இறங்கச் சொன்னதற்கு ஒப்பானது” - நீதிபதி சந்துரு

மு.க.ஸ்டாலின் மிசா கைது குறித்து தொடர்ந்து பேசி வருவது ஒரு தனிப்பட்ட கட்சியின் ஆதரவாளர் என உங்கள் மீது முத்திரை குத்தப்பட வழிவகுக்காதா என்ற கேள்விக்கு பதிலளித்த நீதிபதி கே.சந்துரு “வரலாற்றைத் திரித்து எழுதுவதையும், மறைப்பதையும் இந்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன. நான் மிசா காலத்தில் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த தகவல்களை இப்போது பதிவு செய்ய வேண்டியது என் கடமை. குற்றம் நடக்கும்போது வாய் மூடி இருப்பது, அதற்கு துணை போவதற்கு ஒப்பானது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories