அரசியல்

நான் எம்.பி ஆக வேண்டும் என்பதில் மு.க ஸ்டாலின் தீவிரமாக இருந்தார் : வைகோ உருக்கம் !

“நான் நிச்சயம் மாநிலங்களவைக்குச் செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் மு.க.ஸ்டாலின்” என்று வைகோ தெரிவித்துள்ளார். 

நான் எம்.பி ஆக வேண்டும் என்பதில் மு.க ஸ்டாலின் தீவிரமாக இருந்தார் : வைகோ உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க சார்பில் என்.ஆர்.இளங்கோ மாற்று வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்தது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. தி.மு.க சார்பாக வழக்கறிஞர் பி.வில்சன், தொ.மு.ச.,வைச் சேர்ந்த சண்முகம் ஆகியோரும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் போட்டியிடுகின்றனர்.

தேச விரோத வழக்கில் வைகோவுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மனுவிற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக நான்காவது வேட்பாளராக என்.ஆர் இளங்கோவை வேட்புமனு தாக்கல் செய்யவைத்துள்ளது தி.மு.க.

இந்நிலையில், இன்று திண்டுக்கல்லில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

“நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மறுமலர்ச்சி தி.மு.க-வின் சார்பில் நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தால் வாய்ப்புத் தருவதாக கூறினார்.

தேச விரோத வழக்கில் தண்டனை வராது என நான் நினைத்தது உண்மைதான். சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற வழக்கில் இதுவரை யாருக்கும் தண்டனை வழங்கப்பட வில்லை. எனக்கு மட்டும்தான் வழங்கப்பட்டது. நாளையும் வழக்கு ஒன்றில் ஆஜராக வேண்டி இருப்பதால், வேட்புமனு பரிசீலனைக்கு செல்லமாட்டேன்.

நான் மாநிலங்களவைக்குச் செல்வதாக இருந்தால் மட்டுமே சீட் தருவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். நான் நிச்சயம் மாநிலங்களவைக்குச் செல்லவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

நான் போட்டியிட அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் கேட்டுக்கொண்டதை அடுத்து தி.மு.க சார்பில் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒருவேளை எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், தி.மு.க-வின் என்.ஆர் இளங்கோதான் மாற்று வேட்பாளர்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories