அரசியல்

ராகுலைத் தொடர்ந்து பதவி விலகும் தலைவர்கள்: பலவீனமாகிறதா காங்கிரஸ் ? என்னாகும் எதிர்காலம் ?

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் அடுத்தடுத்து தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ராகுலைத் தொடர்ந்து பதவி விலகும் தலைவர்கள்: பலவீனமாகிறதா காங்கிரஸ் ? என்னாகும் எதிர்காலம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதற்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலர் அடுத்தடுத்து தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது அக்கட்சியின் எதிர்காலத்தைக் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

17வது மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணி 352 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக் கூறப்பட்ட அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பா.ஜ.க.,வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்துள்ளார்.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் விருப்பங்களைத் தெரித்தும், ராகுல் காந்தி தனது முடிவினை மாற்றிக் கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து பதவியைத் துறந்தார்.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து பிற மாநிலத்தின் முக்கிய தலைவர்களின் ராஜினாமா செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையும் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. 17 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத விரத்தில் அவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

ராகுலைத் தொடர்ந்து பதவி விலகும் தலைவர்கள்: பலவீனமாகிறதா காங்கிரஸ் ? என்னாகும் எதிர்காலம் ?

மக்களவைத் தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மிலிந்த் தியோரா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 26ம் தேதியே ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் மும்பை மாநகர காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மிலிந்த் தியோரா அறிவித்துள்ளார். இவரை அடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் ஜோதிராதித்ய சிந்தியா வழங்கினார்.

இதுபோன்று முக்கிய தலைவர்களில் காங்கிரஸ் கட்சி பொறுப்பிலிருந்து விலகுவது காங்கிரஸ் கட்சிக்குப் பெறும் பின்னடைவை உருவாக்குமே என்ற அச்சம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ள காங்கிரஸுக்கு, அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா செய்வது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories