அரசியல்

உண்மையான தகவல்களைத்  தராமல் இழுத்தடிப்பு : ஆர்.டி.ஐ சட்டத்தை இழுத்து மூட மோடி அரசு முடிவு

தகவல் அறியும் உரிமைச் சட்டமான அர்.டி.ஐ குடிமகன்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாக அளிக்கப்பட்டிருக்கும் ஒரு உரிமை. அதனை நீக்க மோடி அரசு முயற்சித்து வருகிறது. 

உண்மையான தகவல்களைத்  தராமல் இழுத்தடிப்பு : ஆர்.டி.ஐ சட்டத்தை இழுத்து மூட மோடி அரசு முடிவு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாஜக நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று, 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. முன்னதாக மத்திய அமைச்சர்கள் கடந்த ஆட்சியின் போது ஊழலில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. மேலும் திட்டத்திற்கான தொகை செலவிடுவதால் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே, இதுகுறித்து இந்திய வனத்துறை அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ், கடந்த 2017 ஆகஸ்டில் பிரதமர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அவர் அளித்த மனுவில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களைத் தருமாறு கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அலுவலகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில், சஞ்சீவ் சதுர்வேதி முறையிட்டார். இதனை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி விசாரித்த ஆணையம், மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை வழங்க பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் அதன்பிறகும் குறிப்பிட்ட விவரங்களை பிரதமர் அலுவலகம் வழங்கவில்லை.

இதனால், சஞ்சீவ் சதுர்வேதி மீண்டும் மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த தகவல் ஆணையர் சுதிர் பார்கவா, கடந்தஜூலை 1ஆம் தேதி புதிய உத்தரவைப் பிறப்பித்தார். அதில், “பிரதமர் அலுவலகம் பதில் அளிக்க மறுப்பது தவறானது. மனுதாரர் கோரிய விவரங்களை வழங்க வேண்டும்” என்று மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதுபோல ஆணைய அதிகாரியே உத்தரவிடுப்பதன் மூலம் மத்திய அமைச்சர்கள் யாரெனு மிகப் பெரிய ஊழலில் சிக்கி இருப்பார்கள். அதனை மறைக்கவே பட்டியலை வெளியிட்ட பிரதமர் அலுவலகம் மறுப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போதைய மோடி அரசு, கார்பரேட் நலனுக்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆர்.எடி.ஐ சட்டத்தின் மூலம் இந்த தகவல்கள் வெளியே வந்தால், தங்களுக்கு பெரிய சிக்கலாகிவிடும் என்பதால் அந்த சட்டத்தை பலவீனமடையச் செய்ய மோடி அரசு முயற்சித்து வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories