அரசியல்

ராகுல் காந்தியின் முடிவு துணிச்சலானது - ராஜினாமா முடிவை ஆதரித்து பிரியங்கா காந்தி ட்வீட்!

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை அடுத்து ராகுல் காந்தியை பாராட்டி பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார். 

ராகுல் காந்தியின் முடிவு துணிச்சலானது - ராஜினாமா முடிவை ஆதரித்து பிரியங்கா காந்தி ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியதற்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த மே மாதமே தெரிவித்திருந்த நிலையில் நேற்று தனது ராஜினாமா குறித்த முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் ஏற்கவில்லை. அதற்காக பலர் வருத்தமும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை பாராட்டி உத்தரபிரதேச (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில், வெகு சிலருக்கே இது போன்ற துணிச்சல் இருக்கும் எனக் குறிப்பிட்டு ராகுல் காந்தியின் முடிவை மதிப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories