அரசியல்

மோடி கூறும் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ அரசியல் உள்நோக்கம் கொண்டது : திருமாவளவன் சாடல்!

ஒரே நாடு - ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என திருமாவளவன் எம்.பி சாடியுள்ளார்.

மோடி கூறும் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ அரசியல்  உள்நோக்கம் கொண்டது : திருமாவளவன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என ஒரே நாடு - ஒரே தேர்தல் என்பதனை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அதற்கான திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒரே நாடு - ஒரே தேர்தல் எனும் முடிவுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, “ஒரே நாடு - ஒரே தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்திற்கு பண செலவு மிச்சமாகும், தேர்தல் கால அளவு குறையும் என சொல்லப்படுகிறது. இதில் சாத்தியமே இல்லை, இந்த திட்டம் என்பது அடிப்படையில் அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சியாகதான் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறைக்கு அம்பேத்கர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை தேர்தலில் அமல்படுத்துவதன் மூலம் அமெரிக்காவை போன்று அதிபர் ஆட்சியை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கு மோடி அரசு முயற்சி செய்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories