அரசியல்

தேர்தல் வெற்றியை கலைஞரோடு பகிர்ந்துகொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது - கனிமொழி உருக்கம்!

தமிழகத்தில் தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலினின் கடும் உழைப்புக்கும், தி.மு.கவின் கொள்கைகளுக்கும் கிடைத்த வெற்றி என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்

தேர்தல் வெற்றியை கலைஞரோடு பகிர்ந்துகொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது - கனிமொழி உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி, 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியை பெற்றுள்ளார்.

இதனையடுத்து, சென்னைக்கு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு தி.மு.க. தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

பின்னர் பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் திமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி திமுகவின் கொள்கைகளுக்கும் தலைவர் ஸ்டாலினின் கடும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்றும், ஏற்கெனவே தலைவர் ஸ்டாலின் அறிவித்தது போல், மக்களின் உரிமைகளுக்காக தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, சென்னை மெரினாவில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் கனிமொழி.

“தூத்துக்குடி தொகுதியில் பெற்ற வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன். ஆனால், இந்த வெற்றியை தலைவர் கலைஞரோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று கனிமொழி கூறியுள்ளார்.

மேலும், பா.ஜ.க பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ.க.வால் வெற்றியின் நுனியின் கூட தொட முடியாத நிலை இருக்கிறது . இது திராவிட இயக்க சிந்தனை உயிர்ப்புடன் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories