அரசியல்

வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் - நாராயணசாமி நம்பிக்கை !

வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே முழுமையான முடிவு தெரியவரும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் - நாராயணசாமி நம்பிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து புறப்பட்ட ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை புதுச்சேரி வந்தடைந்தது. இதன் வரவேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "90 சதவீத கருத்து கணிப்புகள் பொய்த்து போயுள்ளது. கருத்து கணிப்புகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டுள்ளது. 2004 மற்றும் 2009 ஆகிய கருத்துக் கணிப்புகள் பொய்யாகவே இருந்தது. ஆதலால் தற்போது வந்துள்ள கருத்து கணிப்பு குறித்து கூற முடியாது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். வாக்கு எண்ணிக்கைக்கு பின்னரே உண்மையான முடிவு தெரியவரும்" இவ்வாறு கூறினார்.

banner

Related Stories

Related Stories