நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதியில் மட்டுமில்லாமல் கேரளாவின் வயநாட்டிலும் போட்டியிடுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதனையொட்டி, வயநாட்டில் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் ராகுல் காந்தி.
பரப்புரையின் போது மோடியின் பா.ஜ.க ஆட்சியினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது என சாடியுள்ளார். மேலும், மூன்று பிரச்னைகள் நாட்டு மக்களை வெகுவாகவே பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என அவற்றைப் பட்டியலிட்டார்.
1) மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளான பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்றவற்றால் வேலைவாய்ப்பின்மை, தொழில்கள் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு.
2) மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து, அம்பானி, நீரவ் மோடி போன்ற கார்ப்பரேட் முதலைகளுக்கு கோடிக்கணக்கில் கொடுத்து நாடு சீரழிக்கப்பட்டது.
3) ஒரு நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயிகளை அதள பாதாளத்தில் தள்ளியது. விளைபயிர்களுக்கு உரிய விலை தராமல் விவசாயிகளைப் புறக்கணித்ததால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இவ்வாறு ராகுல் காந்தி, வயநாடு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.