அரசியல்

“தோல்வி பயத்தில் இருக்கிறார் மோடி” - ப.சிதம்பரம் விமர்சனம்!

தமிழகத்தில் தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் மோடி பேசாத சிலவற்றைப் பட்டியலிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.

P Chidambaram
P Chidambaram
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மோடி, தோல்வியடைந்து விடுவோம் என்கிற அச்சத்தில் உள்ளார் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், அ.தி.மு.க அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு இவை குறித்து மோடி வாய் திறப்பதில்லை என பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க அரசின் உண்மையான சாதனைகளான, பணமதிப்பிழப்பு, 4.7 கோடி வேலை இழப்பு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து பேசாதது ஏன் எனவும் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்

banner

Related Stories

Related Stories