அரசியல்

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசம் மாநிலம் அமைதி தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்த நிலையில், கேரளாவின் வயநாட்டிலும் 2வது தொகுதியாக ராகுல் காந்தி போட்டியிடுவதாக கடந்த 1-ம் தேதி அறிவித்தாா்

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசம் மாநிலம் அமைதி தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்த நிலையில், கேரளாவின் வயநாட்டிலும் 2வது தொகுதியாக ராகுல் காந்தி போட்டியிடுவதாக கடந்த 1-ம் தேதி அறிவித்தாா். இதையடுத்து கேரளாவில் காங்கிரசாா் உற்சாகத்தில் துள்ளி குதித்தனா்.

"தென் இந்தியாவை பாஜக புறக்கணித்துவிட்டால் அங்குள்ள மக்கள் அதிருப்தியில் உள்ளனர். உங்களோடு நான் இருக்கிறேன் என்பதை காண்பிக்க வயநாட்டில் நான் போட்டியிட உள்ளேன்" என்று விளக்கம் கொடுத்தார் ராகுல் காந்தி.

கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்ய டெல்லியில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு சகோதாி பிாியங்காவுடன் கோழிக்கோடு காிப்பூா் விமான நிலையத்துக்கு வந்தாா். பின்னா் அங்கு விருந்தினா் மாளிகையில் கட்சி நிா்வாகிகளை சந்தித்து விட்டு தங்கினாா்.

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி 

இன்று காலை 11 மணிக்கு அங்கிருந்து வயநாடு கல்ப்பற்றாவுக்கு தனி விமானத்தில் வந்த ராகுலும் பிாியங்காவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக காா் மூலம் வயநாடு கலெக்டா் அலுவலகம் வந்தனா். அப்போது ரோட்டின் இருபக்கமும் தொண்டா்கள் சூழ்ந்து நின்றனா்.

பின்னா் கலெக்டா் அலுவலகத்துக்குள் சென்ற ராகுல் காந்தி பிாியங்காவுடன் கேரளா முன்னால் முதல்வா் உம்மன் சாண்டி, கேரளா காங்கிரஸ் தலைவா் வேணுகோபால், எதிா்கட்சி தலைவா் ரமேஷ் சென்னிதல, முஸ்லீம் லீக் தலைவா் முகம்மது பஷீா் எம்.பி. ஆகியோரும் சென்றனா்.

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி 

ராகுல் காந்தி கலெக்டா் ஏ.ஆா். அஜய்குமாாிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். தொடா்ந்து வெளியே வந்த அவா் திறந்த வாகனத்தில் ஏறி ஆயிரக்கணக்கான தொண்டா்களுடன் கல்ப்பற்றா வரை 2 கி.மீ ஊா்வலமாக சென்றாா். அப்போது வழி யெங்கிலும் ராகுல் காந்தியை பாா்க்க கூட்டம் அலை மோதியது.

banner

Related Stories

Related Stories