உணர்வோசை

உலகெங்கும் விரட்டப்பட்ட யூதர்கள்.. அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனர்கள்.. இஸ்ரேல் - பாலஸ்தீன் வரலாறு !

உலகெங்கும் விரட்டப்பட்ட யூதர்கள்.. அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனர்கள்.. இஸ்ரேல் - பாலஸ்தீன் வரலாறு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

காலம் புலப்பட்டிருக்காத காலம் ஒன்றில் கடவுள் சொன்னார்,

‘பாலைநிலத்திலிருந்து இந்த லெபனோன் வரையிலும், யூப்பிரத்தீசு பேராறு தொடங்கி இத்தியர் நாடு முழுவதுமாகக் கதிரவன் மறையும் பெருங்கடல் வரையிலும் உங்கள் நிலமாக இருக்கும்’

பாலஸ்தீனம் இன்று பிய்த்தெறியப்படுவதற்கான அடிப்படை காரணம் இதுதான்.

1897ம் ஆண்டில்தான் முதன்முதலாக யூதர்களுக்கு என தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது. வரலாற்றின்படி அதற்கு முன் ஈராயிரம் வருடங்களாக யூதர்கள் தனித்த நாடு என கொண்டிருக்கவில்லை. இன்றைய பாலஸ்தீன பகுதியில் கடைசியாக யூதர்கள் என சிலரேனும் சில காலத்துக்கு வாழ்ந்தது கிமு7ம் நூற்றாண்டில்தான். அப்போதும் அங்கு யூதர்கள் மட்டுமென வாழ்ந்துவிடவில்லை. பல இனத்தார் பல வித வழிபாடுகளுடன் ஒன்றாகவே வாழ்ந்திருந்தனர்.

அதற்கு பிறகான காலகட்டங்களில் போர், அரசியல் மற்றும் பிழைப்பு காரணங்களுக்காக பாலஸ்தீன பகுதியிலிருந்து யூதர்கள் சிதறினர். பாபிலோன் முதலிய பிற பகுதிகளுக்கு சென்றனர். பின் அதிகாரம் மாறியதும் மீண்டும் இஸ்ரேலுக்கு சென்றனர். தொடர்ந்த அரசியல் நிலைகளின் காரணமாக வருவதும் போவதுமென சில காலத்துக்கு இருந்து பிற்பாடு முற்றிலுமாக வெளியேறி உலகம் முழுவதற்கும் பரவி வாழ்ந்தனர்.

உலகெங்கும் விரட்டப்பட்ட யூதர்கள்.. அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனர்கள்.. இஸ்ரேல் - பாலஸ்தீன் வரலாறு !

கிறித்துவ மதம் தோன்றிய காலத்துக்கு பின் யூதர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் கடுமையான சண்டைகள் நிகழ்ந்தன. பிறகு இஸ்லாமிய மதம் உருவானது. அரபு நாடுகளின் அதிகாரத்துக்குள் இஸ்ரேல் எனப்படும் ஜெருசலேம் சென்றது, அப்பகுதியிலிருந்த யூதர்கள் பிறர் எவரின் ஆதிக்கத்துக்குள்ளும் இருப்பதை விட அரபு நாடுகளின் ஆதிக்கத்துக்குள் இருப்பது பாதுகாப்பானது என்று கருதி அவர்களை ஏற்றனர்.

ஐரோப்பாவில் பரவியிருந்த மிக அதிகமாக அதிகாரத்துக்கு அருகேயே தங்களை இருத்திக் கொண்டனர். முக்கியமாக இஸ்லாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே வணிகம் நடத்தும் தரகர்களாக மேற்கு ஐரோப்பாவில் மாறி செல்வம் குவித்தனர். ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க அரசர்கள் யூதர்களை வெளியேற்றினர். அங்கிருந்து அவர்கள் ஓட்டோமான் சாம்ராஜ்யத்துக்கும் பிற இடங்களுக்கும் சென்று தஞ்சமடைந்தனர். போலந்து, லித்துவேனிய நாட்டுப்பகுதிகளில் அதிகமாக யூதர்கள் இடம் பெயர்ந்தனர். காரணம் குடியேறுவதற்கான சலுகைகளும் வரவேற்பையும் அந்நாடுகள் கொண்டிருந்தன.

பதினேழாம் நூற்றாண்டு தொடக்கத்தில் 300000 யூதர்கள் இப்பகுதியில் வாழ்ந்தனர். உலக யூத எண்ணிக்கையில் பாதி! ஆனால் அதுவும் ஒரு நூற்றாண்டு தாண்டவில்லை. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அப்பகுதி பூர்வக்குடி மக்களின் எதிர்ப்பை யூதர்கள் சம்பாதித்தனர். அவர்களுக்கு கிடைத்த சலுகை, வணிகம், வளர்ச்சி மற்றும் அதிகாரம் ஆகியவை பூர்விக மக்களிடையே கடும் வெறுப்பை உருவாக்கியிருந்தது. ஒரு லட்சம் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மிச்சமிருந்தோர் தப்பியோடினர்.

அரசியல் சூழல்களின் காரணமாக நாடுகளின் எல்லைகளும் மாற்றம் பெற்றன. ரஷியாவிலும் யூதர்களுக்கு ஆதரவு இருக்கவில்லை.

எல்லா இடங்களிலும் ஆக்கிரமிப்பதும் மக்களை சுரண்டும் அதிகாரம் நிரப்புவதுமே வேலைகளாக கொண்டிருந்தது பெரும்பாலான மக்கள் கூட்டங்களின் எதிர்ப்பையே யூதர்களுக்கு ஏற்படுத்தியது. அப்பகுதிகளிலிருந்து வெளியேறிய யூதர்கள் மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தஞ்சம் புகுந்தனர். ஏற்கனவே அங்கு செல்வபோகத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களின் உதவிகளும் சுரண்டலுக்கு பெயர் போன அரசின் சலுகைகளும் சென்றவர்களுக்கு கிடைத்தது. அப்போதுதான் மிக முக்கியமான சம்பவம் நடந்தது.

சயனிஸ்ட் என்ற பெயரில் யூதர்கள் ஒன்றிணைந்தனர். தங்களுக்கான தனி நாடு பாலஸ்தீனம் இருக்கும் பகுதியில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதுவே தங்களின் பூர்விகம் என்றும் குரல் எழுப்பினர். அதாவது, தனி நாடு வேண்டும் என அவர்கள் கேட்ட பகுதியிலிருந்து கிளம்பி சென்ற ஈராயிரம் வருடங்களுக்கு பிறகு அதே இடத்தில் மீண்டும் இடம் கேட்டனர். யூதர்கள் கிளம்பி சென்றதற்கு பிறகு அந்த இடத்தில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழவே இல்லை. காரணம் என்ன தெரியுமா? யூத இனம் உலகில் கொண்டிருந்த அதிகாரம், வணிகம் மற்றும் செல்வம்!

யூதர்களுக்கான தனி நாடு கேட்கப்பட்ட காலத்தில் பாலஸ்தீனம் ஓட்டோமோன் சாம்ராஜ்யத்தில் இருந்தது. யூதர்களின் திட்டத்துக்கு ஓட்டோமான் சாம்ராஜ்யம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. சில ஆண்டுகளிலேயே முதல் உலகப் போர் வெடித்தது.

ஓட்டோமான் சாம்ராஜ்யமும் ஜெர்மனியும் அணி சேர்ந்தன. தோற்கும் நிலையிலிருந்து பிரிட்டன் எல்லா பக்கங்களிலும் இருந்து தனக்கான ஆதரவை திரட்டியது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் செய்த அதே திருட்டுத்தனத்தை பாலஸ்தீனத்துக்கும் பிரிட்டன் அந்த நேரத்தில் செய்தது. யூத ஆதரவு கிடைக்க அவர்களின் விருப்பப்படி தனி நாடு உருவாக்கத்துக்கு உதவுவதாக வாக்குறுதி கொடுத்தது. மறுபக்கத்தில் ஓட்டோமான் சாம்ராஜ்யத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த பாலஸ்தீனர்களுக்கும் தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவதாக உறுதி அளித்தது.உலக வரலாற்றில் ஐரோப்பியர்களும் ஆரியர்களும் யூதர்களும் செய்த அழிச்சாட்டியங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

முதல் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டனின் அதிகாரத்துக்குள் பாலஸ்தீன பகுதி இருந்தது. கொடுத்த வாக்குறுதிகளின் காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டு அதற்கான முயற்சிகளை தொடங்கியது பிரிட்டன். அச்சமயத்தில் பாலஸ்தீனத்தில் வெறும் 10% யூதர்கள் மட்டுமே இருந்தார்கள்.

அதே காலகட்டத்தில் ஜெர்மனியில் பதவியேறிய ஹிட்லரால், யூதர்கள் குறி வைக்கப்பட்டார்கள். பெரும் அழித்தொழிப்புக்கான அறைகூவலை விடுத்து அதை செய்யவும் ஆயத்தமானான் ஹிட்லர். ஆதலால் ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவிலிருந்த யூதர்கள் அதிகமாக பாலஸ்தீனத்தில் குடியேறினர். பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்கும் யூதர்களுக்கும் பிரச்சினைகள் மூளத் தொடங்கின.

உலகெங்கும் விரட்டப்பட்ட யூதர்கள்.. அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனர்கள்.. இஸ்ரேல் - பாலஸ்தீன் வரலாறு !

பிரிட்டன் வழக்கம்போல் கை கழுவும் வேலையைத் தொடங்கியது. யூதர்களுக்கு ஏதுவான தனி நாட்டை உருவாக்கும் வேலையை முன்னெடுத்தது. ஜெருசலேம் நகரை சர்வதேச நகருக்கான சிறப்பு அந்தஸ்து கொடுத்தும் மிச்ச பாலஸ்தீன பகுதியை இரண்டாக பிரிப்பதும் என திட்டத்தை அறிவித்தது. சயனிஸ்டுகள் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்தனர். ஆனால் அரபு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விளைவாக இரு தரப்புக்கும் போர் தொடங்கியது.

பாலஸ்தீனத்தை யூதர்கள் ஆக்கிரமிப்பதற்கு எதிராக போராடிய பாலஸ்தீனர்களுக்கு அரபு நாடுகள் ஆதரவளித்தன. மறுபக்கத்தில் யூதர்கள், ஐரோப்பாவில் குவித்து வைத்திருந்த செல்வத்தை கொண்டு பல நாடுகளுடன் ராணுவ ஒப்பந்தங்களை போட்டனர். நவீன ஆயுதங்களை வாங்கினர். சர்வதேச ராணுவப் பயிற்சி பெற்று பாலஸ்தீன மக்களுக்கு எதிராக போரிட்டனர்.

1948ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள். பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது. யூதர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்தனர். வெஸ்ட் பேங்க் பகுதியை ஜோர்டானும் காசா பகுதியை எகிப்தும் வென்றது. மிச்சப் பகுதியை இஸ்ரேல் தன்னுடைய பகுதி என நிர்மாணித்துக் கொண்டது.

ஏழு லட்சம் பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டனர். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து யூதர்கள் இஸ்ரேல் நாட்டுக்கு குடிபெயர்ந்தனர். மீண்டும் 1969ம் ஆண்டு இஸ்ரேல் போர் தொடுத்தது. காசா மற்றும் வெஸ்ட் பாங்க் பகுதிகளுக்கும் யூதர்களை குடியமர்த்தியது.

உலகம் இரு துருவங்களாக பிரிந்திருந்த காலத்தில் சோவியத் யூனியன் அரபு நாடுகளுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் ஆதரவு அளித்தது. அமெரிக்கா இஸ்ரேல் பக்கம். 22000 டன் அளவுக்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்தது. அங்கிருந்துதான் அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பின. தங்களின் எண்ணெய் வளத்தை அமெரிக்காவுக்கு கொடுக்காமல் முடக்கின.

அதிலிருந்து அமெரிக்காவும் அரபு நாடுகளுக்கு எதிராக பல போர்களை தொடுக்கத் தொடங்கியது தனிக்கதை.

யூதர்களின் திருட்டுத்தனத்தால் தன்னுடைய எதிரியை அமெரிக்காவின் எதிரியாகவும் மாற்றியது. விளைவு இன்னும் கொடூரம். அமெரிக்கா தன்னுடைய எதிரியை உலக மொத்தத்துக்குமான எதிரியாக மாற்றியது. இஸ்லாமியர்களையும் உலகெங்கும் எதிரிகள் என சித்தரித்து வைத்திருக்கிறது.

எந்தளவுக்கு இழி அரசியலை செய்கிறார்களெனில், சமீபத்தில் கூட இஸ்ரெலின் நெதென்யாஹு, யூதர்களை கொல்ல ஹிட்லரை தூண்டி விட்டது ஓர் இஸ்லாமியர் என வெட்கமே இன்றி பேசியிருக்கிறான்.

புராணக் கதைகளை வரலாறு என சொல்வதும் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை விதைப்பதும் இஸ்ரேல் எனில் அதை நட்பு நாடாக கொண்டிருக்கும் இந்திய அரசும் நட்பு சித்தாந்தமாக பாவிக்கும் பார்ப்பனிய பாஜகவும் நம்மை என்னவெல்லாம் எதிர்காலத்தில் பாடுபடுத்தும் என்பதை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளலாம்.

banner

Related Stories

Related Stories