உணர்வோசை

ஹிட்லர் தற்கொலைக்கு பின் 1948 ஆண்டு வெளியான Rope படம்.. ஒரு மரணம் என்ன செய்யும்?

ஒரு மரணம் என்ன செய்யும்? ஒரு கொலை ஒரு மனிதனை என்ன செய்யும்?

ஹிட்லர் தற்கொலைக்கு பின் 1948 ஆண்டு வெளியான Rope படம்.. ஒரு மரணம் என்ன செய்யும்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மனிதனின் பரிணாமம் இக்கேள்வியையும் இதற்கான பதிலையும் தொடர்ந்து எதிர்கொண்டும் சந்தித்து கொண்டும் அனுபவித்துக் கொண்டுமே பயணித்து வருகிறது. இரு கேள்விகளும் அடிநாதமாக கொண்டிருக்கும் கருத்து ஒன்றுதான்:

சக மனிதன் மீதான நம் அக்கறை அல்லது ஆதிக்கம் எந்தளவுக்கு இருக்கும்? சக மனிதனை கொல்லும் அளவுக்கு ஆதிக்கம் செல்ல முடியுமா? சக மனிதனை காக்குமளவுக்கு அக்கறை நீள முடியுமா?

இக்கருத்தை பல்வேறு தத்துவ ஆசிரியர்களும் தத்துவவியலாளர்களும் அணுகி பல்வேறு விடைகளை அளித்திருக்கின்றனர். அதில் சுவாரஸ்யமான விடைதான் ஃப்ரெடரிக் நீட்சே தந்த விடை.

நீட்சேவைப் பொறுத்தவரை சமகால துன்பங்களிலிருந்து மனித குலம் பிழைக்க ஒரு அதிமனிதன் (superhuman) தேவை. அந்த அதிமனிதன் தற்கால சமூகக் கட்டுப்பாடுகளையும் தளைகளையும் உடைத்தழிக்கும் அளவுக்கு சுதந்திரமும் அதிகாரமும் பெற்றவனாக இருப்பான் என்பதே நீட்சே முன்வைத்த கருத்தின் அடிப்படை. பிற்காலத்தில் அக்கருத்து எந்தளவுக்கு கொடுமையாக மாற்றி பிரயோகிக்கப்படும் என்பதை நீட்சே அறிந்திருக்கவில்லை.

ஹிட்லர் தற்கொலைக்கு பின் 1948 ஆண்டு வெளியான Rope படம்.. ஒரு மரணம் என்ன செய்யும்?

ஹிட்லருக்கு நீட்சேவைதான் வழிகாட்டியாகக் கொண்டான். அதிமனிதனாகவும் அதிகாரம் மிக்கவனாகவும் தன்னைக் கருதி கொண்டு மேலாதிக்கத்தை கட்டமைத்து யூதர்களை அழித்தொழிக்கும் மாபெரும் செயல்பாட்டை முன் நின்று நடத்தினான். தன்னைப் போன்ற ஆரியர்தான் அதிமனிதர் என நம்பினான். ஆரியக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஜெர்மானிய பெண்கள் நாஜி போர் வீரர்கள், அதிகாரிகள் போன்றோரை புணர்வதை பாக்கியமாகவே கருதிய நிலை நிலவியது. ஹிட்லர் முன்வைத்த நாஜியம்தான் நீட்சேவின் அதீத மனிதனுக்கு தேவைப்படும் அதிகாரமா?

இத்தகைய ஒரு பெரும் அரசியல் தத்துவப் பின்னணியுடன் உலகப்புகழ் பெற்ற இயக்குநரான ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் Rope என்கிற படத்தை 1948ம் ஆண்டில் இயக்கியிருந்தார்.

ஹிட்லர் தற்கொலைக்கு பின் 1948 ஆண்டு வெளியான Rope படம்.. ஒரு மரணம் என்ன செய்யும்?

நீட்சேவை ஹிட்லர் பாணியில் புரிந்து கொள்ளும் ஒருவன் இன்னொருவனுடன் சேர்ந்து நண்பனை கொல்கிறான். பெரிய காரணம் ஒன்றுமில்லை. கொல்லப்பட்டவன் ஒரு சாதாரணன். பலவீனன். உலகுடன் போட்டி போடும் திறனற்றவன். அவ்வளவுதான். அவனெல்லாம் வாழ வேண்டியதில்லை என்ற ஹிட்லர் பாணி நீட்சே புரிதலைக் கொண்டிருக்கும் நாயகன் அவனைக் கொல்லும் நாளில் ஒரு விருந்தை நண்பர்களுக்கு ஏற்பாடு செய்திருப்பான். விருந்தில் கலந்து கொள்ள நண்பர்கள் வருகை தருகின்றனர்.

சிறப்பான விருந்தோம்பலை பேணுகிறான் நாயகன். அவனுடன் கொலை புரிந்த இன்னொருவனுக்கு மட்டும் உள்ளூர நடுக்கம் இருக்கிறது. அச்சூழலை இன்னும் சிறப்பாக்கி தன் பரிசோதனையை ஆழப்படுத்த நினைக்கும் நாயகன் விருந்துண்ணும் மேஜைக்குள்ளேயே கொல்லப்பட்டவனின் பிணத்தை போட்டு மூடி வைக்கிறான். விருந்தினர்கள் விருந்துண்ணும் மேஜைக்குள் ஒரு பிணம் இருக்கிறது. அந்த விஷயம் அங்கிருக்கும் இருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. ஒருவன் அச்சூழலை ரசிக்கிறான். இன்னொருவன் அச்சூழல் தரும் அமானுட அருவருப்பில் மருளுகிறான். இருவர் அல்லாமல் இன்னொரு முக்கியமான நபர் விருந்தில் கலந்து கொள்கிறார்.

நீட்சேவை பற்றி நாயகனுக்கு பாடம் எடுத்த பேராசிரியர்!

கொலை கண்டுபிடிக்கப்படுகிறதா, நாயகன் என்னவானான், பேராசிரியர் கொடுக்கும் தத்துவ விளக்கம் என்ன ஆகியவற்றை படம் பார்த்து தெரிந்து கொள்ளவும். ஹிட்லர் தற்கொலை செய்துகொண்ட 1945ம் ஆண்டிலிருந்து மூன்று வருடங்களில் இப்படம் வெளியாகி இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

banner

Related Stories

Related Stories